Kia Carens 7-seater SUV | இந்தியாவில் அறிமுகமானது Kia Carens 7-சீட்டர் SUV..

கியா கேரன்ஸ் எம்பிவி காரில், 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் தேர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 140 பிஎஸ் பவரையும், 242 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

Continues below advertisement

Kia Carens 7-சீட்டர் மூன்று-வரிசை SUV கார் அதிகாரப்பூர்வ சந்தை அறிமுகத்திற்கு முன்னர் இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த கார் அடிப்படையில்  Kia Seltosஐ அடிப்படையாகக் கொண்ட மூன்று வரிசை SUV வகை ஆகும்.  இந்தக் காரானது இந்தியாவில் Tata Safari மற்றும் MG Hector Plus ஆகியவற்றிற்கு போட்டியாக இருக்கும். Kia Carens காரின் நீளம் 4,540mm, அகலம் 1,800mm, உயரம் 1,700mm, மற்றும் 2,780mm ஆகும்.

Continues below advertisement

கியா கேரன்ஸ் எம்பிவி கார் 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் தேர்வுகளில் கிடைக்கவுள்ளது. இதில், 6 சீட்டர் மாடலின் நடுவரிசையில் கேப்டன் இருக்கைகள் இடம்பெறவுள்ளன. ஆனால் பவர்ட்ரெயின் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கியா நிறுவனத்தின் செல்டோஸ் எஸ்யூவி காருடன், கியா கேரன்ஸ் எம்பிவி கார் பகிர்ந்து கொள்ளவுள்ளது.


இதன்படி கியா கேரன்ஸ் எம்பிவி காரில், 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் தேர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 140 பிஎஸ் பவரையும், 242 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு ட்யூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

கியா கேரன்ஸில் உள்ள மற்ற குறிப்பிடத்தக்க முக்கிய கூறுகள் மூன்று-ஸ்போக் மல்டி-ஃபங்க்ஸ்னல் ஸ்டீயரிங் வீல், புதிய Kia லோகோவை மையத்தில் கொண்டுள்ளது. 10.25-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் அனைத்து டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவையும் உள்ளன.


அதுமட்டுமின்றி கியா கேரன்ஸ், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் UVO இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. இதில்ஆட்டோ க்ளைமேட் கன்ட்ரோல், பின்புற டேபிள் தட்டுகள் மற்றும் சன்ரூஃப் போன்ற மற்ற குறிப்பிடத்தக்க அம்சங்களும் உள்ளன.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

Instagram Update | செம்மையா இருக்குமே!! இன்ஸ்டா ஸ்டோரியில் வருகிறது சூப்பர் அப்டேட்..

Jio 1 Rs Recharge Plan: ஒரு ரூபாய்க்கு இண்டர்நெட் ரீசார்ஜ்! புதிய அதிரடி ப்ளானை அறிமுகம் செய்த ஜியோ!

Jio | அதிக டவுன்லோட் வேகம்கொண்ட நெட்வொர்க் `ஜியோ’... ட்ராய் அறிவிப்பு.. அடுத்தடுத்த இடங்களில் யார்?

Whatsapp Schedule Message: வாட்ஸ்அப்பில் மெசேஜ்-ஐ ஷெட்யூல் செய்வது எப்படி ? இதோ ஈசி டிப்ஸ்!

Continues below advertisement
Sponsored Links by Taboola