உலகம் முழுவதும் அதிக பேர் மூழ்கி இருக்கும் முக்கியமான சமூக வலைதளங்களில் ஒன்று இன்ஸ்டாகிராம். அதிலும் குறிப்பாக கொரோனா ஊரடங்கில் டிக்டாக் தடைக்கு பிறகு இன்ஸ்டா ரீல்ஸ் பலரையும் அடிமையாக்கி உள்ளது. அந்த வகையில் பள்ளி மற்றும் இளம் பருவத்தில் இருக்கும் பலர் இந்த தளத்தில் அதிகமாக தங்களுடைய நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இன்ஸ்டாக்குள் போய் ரீல்ஸ்க்குள் போய்விட்டால் அடுத்து அடுத்து என வீடியோ ஓடிக்கொண்டே இருக்கும். 


அந்த அளவுக்கு இன்ஸ்டா ரீல்ஸ் பிரபலம். இந்நிலையில் ஸ்டோரி வைக்கும் முறையில் புதிய அப்டேட்டை இன்ஸ்டா கொண்டுவரவுள்ளது. ஒரு நிமிடம் ஓடக்கூடிய வீடியோவை ஸ்டோரியாக வைக்கும் அப்டேட்டை கொண்டு வர இன்ஸ்டா திட்டமிட்டுள்ளது.  ஸ்னாப்ஷாட், டிக் டாக் ஆகிய நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளவே இது மாதிரியான புது அப்டேட்டை இன்ஸ்டா கொண்டுவரவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஸ்டோரி அப்டேட் எப்போது நடைமுறைக்கு வரும் என அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. ஆனால் விரைவில் பயன்பாட்டுக்கு வரலாம் எனத் தெரிகிறது. 




சமீபத்தில் இன்ஸ்டா நினைவூட்டல் அப்டேட்டை  கொண்டு வந்தது. அதாவது இன்ஸ்டாகிராமிலேயே நீங்கள் அதிக நேரம் செலவிட்டால் உங்கள் பாப் அப் முறையில் நோட்டிபிகேஷன் வரும். 10 நிமிடம், 20 நிமிடம், 30  நிமிடம் என நமக்கான நேரத்தை நாம் செலக்ட் செய்து கொள்ளலாம். அந்த குறிப்பிட்ட நேர இடைவெளியில் உங்களுக்கான நினைவூட்டல் வரும். இன்ஸ்டாகிராமில் இருந்தது போதும் மற்ற வேலைகளையும் பாருங்கள் என்பது போல இந்த நினைவூட்டல் அப்டேட்டை இன்ஸ்டா கொண்டு வந்தது. அதேபோல்  அடையாள சரிபார்ப்புக்காக வீடியோ செல்ஃபிகளைக் கேட்கத் தொடங்கியது


இன்ஸ்டா. சமூக ஊடக தளத்தில் போலி சுயவிவரங்கள் மற்றும் ஸ்பேம் கணக்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை இருக்கலாம். ஒரு குறிப்பிட்ட பயனர் உண்மையான நபரா இல்லையா என்பதைப் புரிந்துகொள்ள புதிய அடையாளச் சரிபார்ப்பு செயல்முறை Instagram-க்கு உதவும் என்பதை ஸ்கிரீன்ஷாட்கள் காட்டுகின்றன. உங்கள் தலையை வெவ்வேறு திசைகளில் திருப்புவதற்கான ஒரு சிறிய வீடியோவை  கேட்கும். இந்த வீடியோ செல்ஃபிகள் பின்தளத்தில் சேமிக்கப்படாது மேலும் 30 நாட்களில் நீக்கப்படும் என்று நிறுவனம் உறுதியளித்தது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண