உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தின் காரணமாக எரிப்பொருள் வாகனங்களுக்கு போட்டியாக எலக்டிரிக் வாகனங்களின் விற்பனை வேகம் எடுத்து வருகிறது. அமெரிக்கா,ஐரோப்பா,இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் எலக்டிரிக் வாகனங்களில் விற்பனை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதன்காரணமாக அனைத்து முன்னணி கார் நிறுவனங்களும் புதிய வகை எலக்டிரிக் கார்களை சந்தையில் விற்பனைக்கு கொண்டு வர உள்ளன.
இந்நிலையில் ஹூண்டாய் நிறுவனமும் இந்தாண்டு இறுதிக்குள் புதிய வகை எலக்டிரிக் கார் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி ஹூண்டாய் ஐயோனிக்-5 என்ற எலக்டிரிக் எஸ்யூவி கார் புதிதாக சந்தைக்கு வர உள்ளது. இது முழுக்க எலக்டிரிக் பயன்பாட்டில் இயங்கக்கூடிய காராக அமைந்துள்ளது. இது புதிய E-GMP பிளாட்ஃபார்ம் வசதியின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆகவே ஹூண்டாய் நிறுவனத்தின் பெட்ரோல் மற்றும் டீசல் ரக கார்கள் தயாரிப்பிற்கும் இதுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கார் எஸ்யூவி ரகத்தில் பெரிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக பிக்சலேடட் எல் இடி விளக்குகள் பொறிக்கப்பட்டுள்ளன. 20 இன்ச் சக்கரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுடன் கண்ணை கவரும் கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன. மற்ற ஹூண்டாய் கார்களைவிட இந்த காரின் உள்பகுதி சற்று வித்தியாசமாக அமைந்துள்ளது. இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் உள்பகுதியை தயாரிக்க முழுக்க சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தாத பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக இயற்கையான செடி நூல்கள், பயோ பெயிண்ட் ஆகியவை கொண்டு உள் பகுதி தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த காரில் 58 kWh or 72.6 kWh பேட்டரி பேக் மற்றும் AWD அல்லது ரியர் மோட்டர் பொறுத்தப்பட்டுள்ளது. இந்த வகை பேட்டரியை ஏசி அல்லது டிசி மின்சாரம் கொண்டு வேகமாக சார்ஜ் செய்து கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதை ஒரு சார்ஜ் வசதியில் 500 கிலோ மீட்டர் வரை இயக்க முடியும் என்று ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இந்த காரின் விலை மதிப்பு சுமார் 40 லட்சமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:அல்டிமேட் ராயல்.. அதகள வசதிகள்.. இந்தியாவில் அறிமுகமானது ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ப்ளாக் பேட்ஜ்.. சிறப்பம்சங்கள் என்ன?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Car loan Information:
Calculate Car Loan EMI