இந்தியாவில் கூடிய விரைவில் மின்சார வாகனம் (EV) பயன்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, அடுத்த 3-4 ஆண்டுகளில் சுமார் 14,000 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 48,000 கூடுதல் மின்சார வாகன சார்ஜர்கள் அமைக்கப்படும் என அண்மையில் வெளியான அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.


இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் பேருந்துப் போக்குவரத்து ஆகிய பிரிவுகளில் EV பயன்பாட்டின் ஊடுருவல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், தற்போது ஆரம்ப நிலையில் உள்ள சார்ஜிங் உள்கட்டமைப்பின் விரிவாக்கம் செய்வது அதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று உள்நாட்டு கடன் தர மதிப்பீட்டு நிறுவனமான ICRA தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.


2025ம் நிதியாண்டில் புதிய வாகன விற்பனையில் மின்சார இரு சக்கர வாகனங்களின் பயன்பாடு 13-15 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிக்கையின்படி மின்சார மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் இ-பஸ் ஆகியவை 30 சதவீதத்திற்கும் அதிகமாக பயன்பாட்டுக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது. 


இதற்கிடையே, இந்தியாவில் உள்ள தொழில்நுட்பங்கள் மற்றும் கொரோனாவிற்கு பிறகு எப்படி இருக்கிறது குறித்து இண்டஸ் வேலி அறிக்கை 2022 என்ற பெயரில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையை ப்ளூம் வென்சர்ஸ் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவிலுள்ள பணப்பரிவர்த்தனை, வேலை வாய்ப்பு, இணையதள பயன்பாடு ஆகியவை குறித்து பல முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. 


அதன்படி இந்தியாவில் கடந்த ஒராண்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் யுபிஐ பரிவர்த்தனைகள் 43% ஆக இருந்துள்ளது. இது கடந்த் ஆண்டு நடைபெற்ற கிரேடிட் மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனைகளைவிட மிகவும் அதிகமானது எனத் தெரியவந்துள்ளது. மேலும் 50% இந்தியர்கள் இன்னும் தங்களுடைய பணபரிவர்த்தனைகளுக்கு பணம் அளிக்கும் முறையை தொடர்ந்து பின்பற்றி வருவதும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  Tata Nexon EV மற்றும் MG ZS EV ஆகியவை உலகளவில் மிகவும் பிரபலமான கார் வகைகளில் ஒன்று. இந்த இரண்டு EV களும் புதிய அவதாரத்தில் விரைவில் வரவேற்கின்றனர். Nexon மற்றும் ZS EV இரண்டு கார்களிலும் சிறப்பு அம்சங்களாக பெரிய பேட்டரி, கூடுதலான இடங்கள் மற்றும் மேலும் பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளனர். 


Nexon EV ஐப் பொறுத்தவரை, புதுப்பிக்கப்பட்ட பதிப்பானது பெரிய 40 kWh பேட்டரி பேக்கைப் பெற்றுள்ளது. மேலும் இதில் வழங்கப்பட்ட வரம்பை விட 400km க்கும் அதிக செயல்திறனை கொண்டுள்ளது. தற்சமயம் Nexon EV ஆனது 312கிமீ வரம்பைக் கொண்டுள்ளது, அதே சமயம் நிஜ உலக வரம்பு 200கிமீ பிளஸ் வரம்பைக் காட்டிலும் சிறியதாக உள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI