எஞ்சினில் சிறிய பிரச்னை இருப்பதால் எப்போது வேண்டுமென்றாலும் தீப்பற்றும் என வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்கள். இது தொடர்பான அறிவிப்பையும் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்துள்ளன அந்நிறுவனங்கள்.


அமெரிக்காவில் இயங்கும் ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கிட்டத்தட்ட 5 லட்சம் வாகனங்கள் ரிஸ்கில் இருப்பதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. சில மாடல் கார்களில் எஞ்சினில் ஒரு சிக்கல் இருப்பதாகவும் இதனால் அந்தக்கார்கள் எப்போது வேண்டுமானால் தீப்பற்றி எரியலாம் என்றும் ஷாக் கொடுத்துள்ளது. 




இதனால் குடியிருப்பு பகுதிக்கு மிக அருகேவும், மற்ற கார்களுக்கு நெருக்கமாகவும் குறிப்பிட்ட கார்களை பார்க் செய்ய வேண்டாமென்றும் கார் நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன. ஆண்டி லாக் ப்ரேக் சிஸ்டமில் ஏற்பட்டுள்ள ஒரு மின்சாதன பிரச்னையால் எளிதில் தீப்பற்ற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் ஹூண்டாய் 3லட்சத்துக்கு 57ஆயிரத்து 830 கார்களையும், கியா நிறுவனம் ஒரு லட்சத்துக்கு 26ஆயிரத்து 747 கார்களையும் திரும்பப் பெற அழைப்பு விடுத்துள்ளது.








Tecno 5G Smartphone: பிப்ரவரி 14 முதல் அமேசானில் கிடைக்கிறது டெக்னோ போவா 5ஜி… அறிமுகச்சலுகைகள் என்னென்ன?




2014-2016 Kia Sportage SUV,  2016-2018 Kia K900 sedans, 2016-2018 Hyundai Santa Fe, 2017-2018 Hyundai Santa Fe,  2019 Santa Fe XL, 2014-2015 Tucson SUV ஆகிய கார் மாடல்கள் இந்த லிஸ்டில் உள்ளன.





இது குறித்து கார் ஓனர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ள கார் நிறுவனங்கள் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பான குறிப்புகளையும், இலவசமாக பழுது சரிசெய்யப்படும் என்ற உறுதியையும் குறிப்பிட்டுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண 


Car loan Information:

Calculate Car Loan EMI