ஹுண்டாய் ஐ20 நிறுவனத்தின் ஃபேஸ்லிப்ட் கார் வேரியண்ட்டின் விலை 6 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஃபேஸ்லிப்ட் கார்கள்:
ஆட்டோமொபைல் சந்தையில் அடுத்தடுத்து பல்வேறு மாற்றங்கள் மற்றும் கூடுதல் அம்சங்களுடன் தொடர்ந்து புதுப்புது கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. வெளியான பிறகு நல்ல வரவேற்பை பெறும் கார்கள் உட்புற மற்றும் வெளிப்புற அமைப்புகளில் சிறு சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு, விற்பனைக்கு கொண்டு வரப்படும் கார்கள் ஃபேஸ்லிப்ட் வேரியண்ட் என குறிப்பிடப்படுகிறது. அந்த வகையில் ஹுண்டாய் நிறுவனத்தின் ஐ20 மாடலின் புதிய ஃபேஸ்லிப்ட் கார் மாடல் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஐ20 வேரியண்ட்:
புதிய ஹூண்டாய் i20 ஃபேஸ்லிஃப்ட் மாடலில் காஸ்மெடிக் மாற்றங்கள் மற்றும் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. பாதுகாப்பு அம்சங்களில் கூடுதல் கவனத்துடன் இன்ஜினிலும் சில மாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. விழாக்காலத்தை முன்னிட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த காரின் தொடக்க விலை விலை ரூ. 6 லட்சத்து 99 ஆயிரம் எனவும், அதிகபட்ச விலை 11 லட்சத்து ஓராயிரம் ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய i20 ஃபேஸ்லிஃப்ட் மாடல் எட்டுவிதமான நிறங்கள் மற்றும் ஐந்து விதமான வேரியண்ட்களில் கிடைக்கிறது.
இன்ஜின் வேரியண்ட்:
முந்தைய வேரியண்டில் 1 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் புதிய வேரியண்ட் காரில் 1.2 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட NA பெட்ரோல் இன்ஜின் இடம்பெற்றுள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் IVT யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஜின் 82 ஹெச்.பி. பவர், 115 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இது மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் 82 bhp மற்றும் IVT தானியங்கி டிரான்ஸ்மிஷனுடன் 86 bhp ஐ வழங்குகிறது. இன்ஜினில் இப்போது ஐடில் ஸ்டாப் & கோ (ஐஎஸ்ஜி) அம்சம் உள்ளது.
வடிவமைப்பு:
வடிவமைப்பை பொருத்தவரையில் பம்பர்கள் கூர்மையான மறுவடிவமைப்பைப் பெற்றுள்ளன. பகல்நேர இயங்கும் விளக்குகளுடன் கூடிய புதிய LED முகப்பு விளக்குகள் உள்ளன. கூடுதலாக, வாகனம் இப்போது புதிதாக வடிவமைக்கப்பட்ட 16-இன்ச் அலாய் வீல்களை கொண்டுள்ளன. 52 Hinglish குரல் கட்டளைகள்
சிறப்பம்சங்கள்:
பாதுகாப்பிற்கு ஆறு ஏர்பேக்குகள் மட்டுமின்றி எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல், வாகன நிலைப்புத்தன்மை மேலாண்மை, 3-பாயிண்ட் சீட்பெல்ட்கள் மற்றும் அனைத்து பயணிகளுக்கும் சீட்பெல்ட் நினைவூட்டல் உள்ளிட்ட நிலையான பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளன. இத்துடன் முற்றிலும் புதிய எல்.ஈ.டி. முகப்பு விளக்குகள், இன்வெர்டெட் எல் வடிவ எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள், ரிவொர்க் செய்யப்பட்ட பம்ப்பர்கள், 16 இன்ச் அலாய் வீல்கள், புதிய கிரில் மற்றும் பொனெட்டில் 3D ஹூண்டாய் லோகோ வழங்கப்பட்டு உள்ளன. காரின் உள்புறத்தில் கிரே மற்றும் பிளாக் தீம் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் போஸ் 7-ஸ்பீக்கர்கள் கொண்ட மியூசிக் சிஸ்டம், செமி லெதர் இருக்கைகள், ஃபிளாட் பாட்டம் ஸ்டீரிங் வீல், லெதர் இருக்கைகள், டோர் ஆர்ம்ரெஸ்ட்கள் இடம்பெற்றுள்ளன. அதோடு, 52 Hinglish குரல் கட்டளைகள், மேம்படுத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவற்றையும் கொண்டுள்ளன.
Car loan Information:
Calculate Car Loan EMI