தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால், தன் அப்பாவிடம் அடிவாங்கிய சம்பவத்தை நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மார்க் ஆண்டனி’. இந்த படத்தில் ரித்து வர்மா, எஸ்.ஜே.சூர்யா, சுனில் வர்மா உள்ளிட்ட பலரும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள மார்க் ஆண்டனி படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இப்படியான நிலையில் படம் தொடர்பாக ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் நடிகர் விஷால் பங்கேற்று வருகிறார். அதில் ஒரு நேர்காணலில் விஷாலின் அப்பாவான தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டி பங்கேற்றார். அதில் தன் அப்பாவிடம் அடிவாங்கிய சம்பவத்தை விஷால் பகிர்ந்திருந்தார்.
அதாவது, “அப்பா, அம்மா கார்மெண்ட்ஸ் நிறுவனம் நடத்தி வந்தனர். அப்பாவை திருமணம் செய்வதற்கு முன்னால் அம்மா விமான பணிப்பெண் ஆக வேலை பார்த்தார். எங்க அத்தையும் (அப்பாவின் தங்கச்சி) அம்மாவும் ஒன்றாக பணிபுரிபவர்கள். அவருடன் பார்ட்டிக்கு சென்று அம்மாவுடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார். எங்களுக்கு கொடுக்க விமானத்தில் கொடுக்கப்படும் சாக்லேட்டுகள் வைத்திருப்பார்கள். சனிக்கிழமை தோறும் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுப்பார்கள்.
ஒருநாள் பீரோவில் சாக்லேட்டுக்காக திறந்தபோது உள்ளே கட்டு கட்டாக பணம் இருந்தது. அது பணம் என்பதே எனக்கு தெரியாது. அந்த பேப்பரை கிழித்து ஜன்னல் வழியே எறிந்து விட்டோம். அம்மா வந்து அப்பாவிடம் சொல்ல அப்பா என்னை அடித்தார். அன்றைக்கே இனி பசங்களை வாழ்நாள் முழுவதும் போல அடிக்கமாட்டார் என சபதம் எடுத்தார்” என கூறினார்.
அப்பாவிடம் பிடிக்காத விஷயம்
அப்பாவிடம் பிடிக்காத ஒரு விஷயம் ஒன்று இருக்கு. ஒருமுறை 2 மாசமாக உன்கிட்ட இந்த வீடியோவை காட்ட நினைத்தேன் என சொன்னார். என்னதுன்னு பார்த்தால் ஒருவர் அவரோட கழுத்திலேயும், இன்னொருவர் முதுகிலும் நின்னுட்டு இருக்காங்க. அப்பா சேர்ல கையும்,காலையும் வச்சி பேலன்ஸ் பண்ணிட்டு இருக்காரு. உலகத்துலேயே இப்படி பண்ண 3வது ஆளு நான் தான் என பெருமையா வேற சொன்னாரு. எனக்கு இவரை திட்டலாமா? வேண்டாமா? என தெரியாமல் போனை கொடுத்துட்டு போய்ட்டேன். அதேபோல் என்னைப் பற்றி விமர்சனம், வதந்தி போன்ற செய்திகள் வந்தால் கூட அந்த பேப்பர் கட்டிங்கை பத்திரமாக வைத்துக் கொள்வார். அவர் ஒரு 80 வயது குழந்தை’ என தெரிவித்திருந்தார்.
எப்ப கல்யாணம் பண்ணப்போற?
மேலும், “நானும், உங்க அம்மாவும் ரொம்ப கவலைப்படுறோம். உனக்கு வாழ்க்கையில ஒரு துணை கொடுக்க வேண்டும் என நினைக்கிறோம். நீயா பாக்குறீயா? இல்லை நாங்க பார்க்கவா?” என்ற கேள்வியை அவரது அப்பா கேட்டார். அதற்கு விஷால், ‘நான் ஏற்கனவே சொன்ன மாதிரி அதுக்குன்னு ஒரு நேரம் வரும். முதலில் நடிகர் சங்க கட்டடம் வரட்டும். வந்ததும் நானே சொல்றேன்’ என பதிலளித்தார். என்கிட்டேயும், அம்மாகிட்டேயும் இதுவரைக்கும் சொல்லாமல் மறைத்த விஷயம் பற்றி அடுத்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, ‘இருக்கு. அவங்களுக்கு கல்யாணம் ஆகிட்ட பிறகு எப்படி சொல்ல முடியும். லவ் பண்ணும்போதும், அது தோல்வியில் முடியும் போதும் என எதையும் நான் மறைச்சது கிடையாது’ என விஷால் கூறினார்.