Hyundai Bayon SUV: ஹுண்டாயின் பேயோன் எஸ்யுவி கார் மாடலானது, உள்நாட்டு சந்தையில் மாருதியின் ஃப்ரான்க்ஸ் கார் மாடலுடன் போட்டியிட உள்ளது.

ஹுண்டாய் பேயோன் எஸ்யுவி:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 2030ம் ஆண்டுக்குள் இன்ஜின், மின்சார மற்றும் ஹைப்ரிட் என அனைத்து எடிஷன்களையும் உள்ளடக்கி, 26 புதிய கார்களை அறிமுகப்படுத்த உள்ளதாக ஹுண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது. அதில் ஒன்று தான் காம்பேக்ட் க்ராஸ் ஓவர் எஸ்யுவி ஆன பேயோன். உள்நாட்டில் மாருதி ஃப்ரான்க்ஸ் கார் மாடலின் நேரடி போட்டியாளராக, 2026ம் ஆண்டின் நடுவில் சந்தைப்படுத்தப்பட உள்ளது. சர்வதேச சந்தைகளில் இந்த காரானது ஃபோல்க்ஸ்வாகன் T-Cross மற்றும் ஃபோர்டின் எகோஸ்போர்ட் ஆகிய மாடல்களுடன் இந்த கார் போட்டியிடுகிறது. இந்தியாவில் விற்பனைக்கு வரும்போது ஃப்ரான்க்ஸ் கார் மாடலின் விலை 10 முதல் 12 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம்.

ஹுண்டாய் பேயோன் - புதிய பெட்ரோல் இன்ஜின்

வெளியாகியுள்ள தகவலின்படி, முற்றிலுமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 1.2 லிட்டர் TGDi பெட்ரோல் இன்ஜினை பெறும் ஹுண்டாய் நிறுவனத்தின் முதல் காராக பேயோன் இருக்கக் கூடும்.  புதிய இன்ஜின் ஆனது, வென்யு கார் மாடலில் உள்ள 120hp மற்றும் 172Nm ஆற்றலை  உற்பத்தி செய்யக்கூடிய 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜினை காட்டிலும் சிறந்த இழுவைத்திறன் மற்றும் பயண அனுபவத்தை வழங்கும் என கூறப்படுகிறது. கூடுதலாக இந்த இன்ஜின் ஆனது 160hp மற்றும் 253Nm ஆற்றலை  உற்பத்தி செய்யக்கூடியதாக க்ரேட்டாவின் 1.5 லிட்டர் டர்போ பெட்ரொல் இன்ஜினை விட மிகவும் கச்சிதமாகவும், சிக்கனமாகவும் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது கூடுதல் மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: Maruti Fronx: No.1 காரின் விலையை உயர்த்திய மாருதி - காரணம்? தேடி தேடி வாங்க இந்த வண்டில என்ன தான் இருக்கு?

ஹுண்டாய் பேயோன்- ஹைப்ரிட் தொழில்நுட்பம்:

புதிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆனது எதிர்காலத்தில் ரூ.15 முதல் ரூ.20 லட்சம் மதிப்பில் சந்தைக்கு வரவுள்ள, ஹுண்டாயின் ஹைப்ரிட் மற்றும் காம்பேக்ட் கார் மாடல்களிலும் இடம்பெற உள்ளது. இந்த இன்ஜின் CAFE 3, BS7 உமிழ்வு மற்றும் செயல்திறன் விதிகளுக்கு ஏற்றதாக இருக்கும். இதில் 6 ஸ்பீட் மேனுவல், 7 ஸ்பீட் DCT ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்பட உள்ளது. 

ஹுண்டாய் பேயோன் - அம்சங்கள்:

ஹுண்டாய் பேயோனில் வயர்லெஸ் ஆண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளேவை அணுகக் கூடிய 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் ட்ரைவர் டிஸ்பிளே, 8 ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம், 4 ஸ்போக் ஸ்டியரிங் வீல், வயர்லெஸ் சார்ஜிங், ஆம்பியண்ட் லைட்டிங், ஃபாஸ்ட் சார்ஜிங் USB Type - C போர்ட்ஸ், ஓவர் தி ஏர் அப்டேட்ஸ், ADAS, ஸ்ப்லிட் பேட்டர்னை கொண்ட எல்இடி ஹெட்லேம்ப்ஸ், பானெட்டில் எல்இடி ஸ்ட்ரிப், பிளாக் ப்ளாஸ்டிக் க்ளாடிங், ஹனிகாம்ப் பேட்டர் உடன் கூடிய ஏர் டேம், 17 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள் மற்றும் பூமராங் வடிவிலான டெயில்லேம்ப் கனெக்டட் எல்இடி ஸ்ட்ரிப் ஆகிய அம்சங்கள் பேயோன் காரில் வழங்கப்பட்டுள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI