விஜய் கமல் போன்ற முன்னணி நடிகர்களை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படத்தை இயக்கியுள்ளார் முழுக்க முழுக்க ஆக்ஷன் கமர்சியல் திரைப்படமாக உருவாகி உள்ள கூலி திரைப்படம் உலக அளவில் பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது குறிப்பாக ரஜினி ரசிகர்கள் மத்தியில் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது கோலிவுட் சார்பில் இருந்து ஆயிரம் கோடி வசூலிக்கும் முதல் படமாக கூலி இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படியான நிலையில் கூலி படத்தில் இளம் நடிகர் ஒருவர் இப்படத்தில் கேமையோ ரோல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
வசூல் வேட்டையில் கூலி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது நாகர்ஜுனா உபேந்திரா சௌபின் சாஹிர் ஸ்ருதிஹாசன் சத்யராஜ் உள்ளிட்ட பலர் படத்தில் நடித்துள்ளார்கள் கூலி படத்திற்கான முன்பதிவுகள் நடைபெற்று வரும் நிலையில் டிக்கெட் விற்பனையில் வசூல் சாதனை படைத்துள்ளது கூலி. முன்பதிவுகளில் மட்டும் இந்தியாவில் கூலி திரைப்படம் 37 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள உலக அளவில் 50 கோடி முன்பதிவில் கூலி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன அதீத வன்முறை காட்சிகள் இடம்பெற்று இருப்பதால் குழி படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது இதனால் குழந்தைகள் இப்படத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்
கூலி படத்தில் சிவகார்த்திகேயன் ?
படம் வெளியாக இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் குளிப்பாட்டத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது கடந்த வாரம் வெளியான கூலி படத்தின் டிரைலரில் ரஜினியின் இளமைப் பருவ காட்சி இடம்பெற்றிருந்தது இந்த காட்சி ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதாக ரசிகர்கள் கூறி வந்தன இப்படியான நிலையில் ரஜினியின் இளமைப் பருவ காட்சிகளில் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன ஏற்கனவே விஜயன் டி கோட் படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ செய்திருந்ததால் கூலி படத்திலும் சிவகார்த்திகேயன் கேமரா செய்திருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது அதே நேரத்தில் ரஜினியின் தீவிரமான ரசிகர் சிவகார்த்திகேயன் என்பது தெரிந்த விஷயமே இது குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறவில்லை என்றாலும் சினிமா வட்டாரங்களில் இந்த தகவல் உண்மை என நம்பப்படுகிறது