வேலூர் சின்ன அல்லாபுரம் பகுதியை சேர்ந்த கேபிள் ஆபரேட்டர் துரைவர்மா என்பவர், தான் பயன்படுத்தி வந்த மின்சார பைக்கை இரவில் வெளியே சார்ஜ் போட்டுவிட்டு தூங்கியிருக்கிறார். இந்த நிலையில் உயர்மின் அழுத்தத்தால் வாகனம் வெடித்ததாகவும், இந்த தீயால் மற்றொரு வாகனமும் தீப்பிடித்தாகவும் சொல்லப்படுகிறது. இதனால் வீடு முழுவதும் புகைமண்டலமாக மாற, தந்தை மகள் இருவரும் வெளியே வரமுடியாத சூழ்நிலை உருவானதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது பேட்டரி வாகனங்களின் மீது மக்களுக்கு ஒரு வித பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  இந்நிலையில் பேட்டரி வாகனங்கள் வெடிக்க  என்ன காரணம்? பாதுகாப்பாக வைத்துக்கொள்வது எப்படி என பார்க்கலாம்.


மின்சார வாகனங்கள் வெடிப்பதற்கான காரணங்கள் குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஆட்டோ மொபைல் நிபுணர் முரளி பேசும் போது,  “ இதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன.


1. உற்பத்தி செய்யும் போதே அதில் ஏதாவது சில குறைகள் இருந்தால் இது போன்று நடக்கலாம். 


2. அதே போல ப்ளக் பாயிண்ட்டில் ப்ளக்கை சரிவர பொருத்தாமல் இருந்தாலும் இந்த மாதிரியான சம்பவம் நடக்க வாய்ப்பு இருக்கிறது. 


3. வாகனத்தின்  பேட்டரி பழுதாக இருந்தாலும் இது போன்று நடக்கலாம்.




4. பேட்டரி அதிகமான நேரம வெயிலில் இருந்து சூடாவது உள்ளிட்ட சில சுற்றுசூழல் காரணங்களாலும் இது போன்ற விபத்து ஏற்படலாம். அதற்கு காரணம், பேட்டரியில் இருப்பது ரசாயன கலவை. அதனால்தான் இவ்வாறு நடக்கிறது. 


5.  இது போன்ற விபத்துகளை தவிர்க்க, முதலில் வாகனத்தை எப்படி பராமரிக்க வேண்டும் என்பது குறித்து நிறுவனம் தரும் அறிவுரைகள் அடங்கிய கையேடை கவனமாக படிக்க வேண்டும். அதை நடைமுறை படுத்தவும் வேண்டும். 


 




அரியலூர் : கட்டாயப்படுத்தி வன்கொடுமை.. வீடியோவை காட்டி மிரட்டி திருமணம்.. நீதிபதி முன்பு தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவி







 




மேலும் படிக்க: சிறுமியை வன்கொடுமை செய்த தாத்தா மற்றும் 3 மகன்கள் - முன் ஜாமீன் கோரிய வழக்கில் எஸ்பி பதில் தர உத்தரவு




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண


 


Car loan Information:

Calculate Car Loan EMI