இந்தியாவில் உள்ள முன்னணி பைக் நிறுவனங்களில் ஒன்று ஹோண்டா நிறுவனம் ஆகும். இவர்களின் பிரத்யேகமான பைக்குகளில் ஒன்று ஹோண்டா ஷைன் ஆகும். ஸ்ப்ளண்டர் ப்ளஸ், பேஸன் ப்ரோ பைக்குகளுக்கு நிகராக விற்பனை செய்யப்படும் பைக் இந்த பைக் ஆகும்.
ஹோண்டா ஷைன்:
இந்த ஹோண்டா ஷைன் பைக் 125 சிசி மற்றும் 100 சிசி திறன் கொண்டது ஆகுமு். தற்போது 125 சிசி பைக்தான் அதிகளவு வாடிக்கையாளர்களால் விரும்பப்படுகிறது. மொத்தம் 4 ஸ்பீட் கியர்களை கொண்டது. இந்த பைக் 55 முதல் 65 கி.மீட்டர் வரை மைலேஜை தருகிறது. மொத்தம் 10.5 லிட்டர் பெட்ரோல் டேங்க் வசதி கொண்டது ஆகும்.
அதிகபட்சமாக இந்த பைக் 100 முதல் 102 கி.மீட்டர் வரை செல்லும் ஆற்றல் கொண்டது ஆகும். இந்த பைக் நீலம், கருப்பு, சாம்பல் என 6 வண்ணங்களில் உள்ளது. 2046 மி.மீட்டர் அகலமும், 741 மி.மீட்டர் நீளமும், 1116 மி.மீட்டர் உயரமும் கொண்டது. சக்கரம் 1285 மி.மீட்டர் கொண்டது. 113 கிலோ எடை காெண்டது. இந்த பைக்கின் இருக்கை 651 மி.மீட்டர் நீளமும், 791 மி.மீட்டர் அகலமும் கொண்டது.
விலை என்ன?
இந்த பைக் இரண்டு வேரியண்ட்களில் உள்ளது. ட்ரம் மற்றும் டிஸ்க் வேரியண்ட்களில் இந்த பைக் உள்ளது. 4 ஸ்ட்ரோக் , BS-VI எஞ்ஜின் கொண்டது. 123.94 சிசி திறன் கொண்டது ஆகும். 6 ஆயிரம் ஆர்பிஎம் ஆற்றல் கொண்டது. செல்ஃப் மற்றும் கிக் ஸ்டார்ட் வசதி கொண்டது.
இந்த பைக்கின் ட்ரம் வெர்சன் ரூபாய் 78 ஆயிரத்து 539 ஆகும். டிஸ்க் வேரியண்ட் ரூபாய் 82 ஆயிரத்து 898 ஆகும். ஹோண்டா ஷைன் எக்ஸ் ஷோரூம் விலை ரூபாய் 64 ஆயிரத்து 776 ஆகும். வாடிக்கையாளர்களை அதிகளவில் கவர்ந்துள்ள இந்த பைக் நல்ல மைலேஜ் தரும் என்பதால் நகர்ப்புறங்களிலும், சாலைகளிலும் இந்த பைக் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஹோண்டா லிவோ, ஹோண்டா எஸ்பி, ஹோண்டா சிபி 125 ஹார்னெட், ஹோண்டா யுனிகார்ன், ஹோண்டா சிபி350, ஹோண்டா எச்னெஸ் , ஹோண்டா என்எக்ஸ் 200 போன்ற பல பைக்குகள் உள்ளது. ஆனாலும், ஸ்ப்ளண்ட்ர் பிளஸ், பேசன் ப்ரோ பைக்கும், இந்த ஹோண்டா ஷைன் பைக்கும் இந்திய சந்தையில் மிகப்பெரிய அளவில் விற்பனையாகி வரும் பைக்குகள் ஆகும்.
இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் இந்த பைக்கை பயன்படுத்தும் வகையில் இந்த பைக் உள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI