செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பணி நிறைவு பெற்ற அரசு பேருந்து ஓட்டுனர் பேருந்தை விட்டு பிரிய மனமில்லாமல்' பேருந்துக்கு முத்தமிட்டும் ஓட்டுனர் சீட்டில் அமர்ந்து கண்ணீர் விட்டு அழுததும், இறுதியாக பேருந்தை அவர் ஓட்டியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பொதுமக்களை காக்கும் பேருந்து ஓட்டுநர்கள்
இந்திய அளவில் பொது போக்குவரத்தில் சிறந்து விளங்கக்கூடிய மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருந்து வருகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்து சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கிராமப் பகுதிகள் மற்றும் நகரப் பகுதிகளை இணைக்கும் வகையில், நகர பேருந்துகள் இயங்கி வருகின்றன.
இந்த நகர பேருந்துகளில் இருக்கும் ஓட்டுனர்கள் கடுமையான பாதையில் பேருந்துகளை ஓட்டிச் சென்று, பொதுமக்களுக்கு சேவை செய்து வருகின்றனர். நீண்ட காலமாக நகரப் பேருந்தில் ஓட்டுநராக இருப்பவர்களுக்கும், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கும் ஒரு இணக்கமான சூழல் ஏற்படும் அளவிற்கு அவர்களுடைய நட்பு ஆழமாக மாறிவிடுகிறது. அதேபோன்று ஓட்டுநர்களும் பொதுமக்களை பத்திரமாக கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நீண்ட காலமாக ஓட்டுனராக பணிபுரிந்து வந்த ஒருவர், பணி நிறைவு விழாவின் போது பேருந்தைO கட்டிப்பிடித்து அழுத சம்பவம் நெகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு மதுராந்தகத்தில் பணி நிறைவு விழா
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த காவாத்தூர் கிராமத்தை சேர்த்தவர் பரமசிவம். இவர் மதுராந்தகம் அரசு போக்குவரத்து பணிமனையில் 30 ஆண்டுகளாக தடம் எண் 100 கொடூர் To மதுராந்தகம் என்ற பேருந்தை ஓட்டி வருபவர் பரமசிவம்.
இன்று அவரது பணியின் கடைசி நாள் என்பதால், அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் கடைசியாக ஒரு முறை பேருந்து ஓட்டுகிறேன் எனக்கூறி அரசு பேருந்தை முத்தமிட்ட காட்சிகள் நிகழ்ச்சியை ஏற்படுத்தியது. ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தும், பிரிய மனமில்லாமல் கண்ணீர் விட்டு அழுதார் பின்பு அந்த அரசு பேருந்து ஓட்டி பார்த்தது நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.