ஹோண்டா நிறுவனம் தனது புதிய  மிட் லெவல் எஸ்யுவி மாடல் காரை, விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த காருக்கு மைலேஜ் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள உறுதிமொழி, கார் பிரியர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


எஸ்யுவி கார் விற்பனை:


நடுத்தர குடும்பத்தினர் அதிகம் வசிக்கும் இந்தியாவில், தற்போது மிட்-சைஸ் எஸ்யுவி கார் மாடல்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு முன்னணி நிறுவனங்களும் புதுப்புது வடிவமைப்பு, தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் என மேம்படுத்தப்பட்ட மிட்-சைஸ் எஸ்யுவி கார் மாடல்களை இந்திய சந்தையில் தொடர்ந்து விற்பனைக்கு கொண்டு வருகின்றன. அந்த வரிசையில் தற்போது புதிய மிட்-சைஸ் எஸ்யுவி கார் ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஹோண்டா எலிவேட் கார்:


ஹோண்டா நிறுவனம் தனது புதிய மிட்-சைஸ் எஸ்யுவி கார் மாடலுக்கு ”எலிவேட்” என பெயர் சூட்ட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2021ம் ஆண்டே எலிவேட் எனும் இந்த பெயரை ஹோண்டா நிறுவனம் முன்பதிவு செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது. ஹோண்டா நிறுவனத்தின் புதிய மிட்-சைஸ் எஸ்யுவி கார் மாடல் வரும் ஜுன் மாதம் பார்வைக்கு கொண்டு வரப்படலாம் எனவும், தொடர்ந்து  நடப்பாண்டு இறுதிக்குள் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இன்ஜின் விவரம்:


புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் கட்டமைக்கப்பட்டுள்ள அதே பிளாட்பார்ம் அடிப்படையில் தான் புதிய எலிவேட் காரும் கட்டமைக்கப்படவுள்ளதாகவும்,  அத்துடன் அதே மாடலில் உள்ள் 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின்தான் புதிய மாடலில் வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம், ஹோண்டா சிட்டி காரில் 120 பிஹெச்பி எனும் அவுட்புட் வழங்கும் இந்த கார், எலிவேட் கர் மாடலில் 110 பிஹெச்பி ஆக தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதுதவிர ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷனும், ஹோண்டா எலிவேட் காரில் வழங்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. 


மைலேஜ் விவரம்:


ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் காரில் இடம்பெற்றுள்ள அதே இன்ஜின்தான், ஹோண்டா எலிவேட் காரிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. சிட்டி ஹைப்ரிட் மாடல் ஒரு லிட்டருக்கு 26.5 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்கும் என ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே எலிவெட் கார் மாடலிலும் இதே மைலேஜை எதிர்பார்க்கலாம்.


விலையும் சிறப்பம்சங்களும்:


எலிவேட் காரின் விலை இந்திய சந்தையில் ரூ.12ட்சம் முதல் ரூ.19 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த விலைக்கு உரிய வகையில், அடாஸ், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல் ஆகியவற்றோடு, பாதுகாப்பை உறுதி செய்யும் வகையயில் ரியர் வியூ கேமரா, ஏபிஎஸ், ஏபிடி மற்றும் மல்டிபிள் ஏர்-பேக்ஸ் என பல்வேறு சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.


போட்டி நிறுவனங்கள்:


இந்திய சந்தையில் தற்போது சுஸுகி க்ராண்ட் விட்டாரா, கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா  மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஆகிய மிட்-சைஸ் எஸ்யுவி கார் மாடல்கள் பிரபலமாக உள்ளன. எலிவேட் மாடலுக்கு ஹோண்டா நிறுவனம் சரியான விலையை நிர்ணயித்தால் பெரும் வரவேற்பை பெறக்கூடும்.


Car loan Information:

Calculate Car Loan EMI