விழுப்புரம்: விழுப்புரத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடி எனக்கும் இந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்திக்காக எல்லாரும் வாக்களித்தீர்கள் இல்லையென்றாலும் அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் சென்றடைய வேண்டுமென முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் மகளிருக்கான ஆட்சி தான் தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நடைபெறுவதாக தெரிவித்தார்.


விழுப்புரம் மாவட்டம் கெடாரில் மே தினத்தினை முன்னிட்டு கிராம சபை கூட்டம் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ புகழேந்தி ஆட்சியர் பழனி தலைமையில் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் பங்கேற்ற கிராம மக்கள் தங்கள் பகுதியில் சுத்தமான குடிநீர் வழங்கப்படவில்லை தார் சாலை அமைத்து தரவேண்டும் அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டுகள் முன் வைத்தனர். இதனைதொடந்து அமைச்சர் பொன்முடி உடனடியாக கிராம மக்கள் கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படுமென உறுதி அளித்த பின்னர் கிராம சபை கூட்டத்தில் பேசிய அமைச்சர் பொன்முடி கிராம புறங்களில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தர வேண்டுமென தங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகவும் பொதுமக்கள் கிராம புறங்களை சுகாதாரமாக வைத்து கொள்ள வேண்டும்.


பொது வெளியில் மலம் கழித்த காலம் மாறி பொது கழிப்பிடங்கள் கட்டப்பட்டு பயன்படுத்தபட்டு வருவதாகவும் நவீன கழிவறைகள் பொது கழிப்பிடங்களில் அமைக்கவும் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் பொன்முடி எனக்கும் இந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்திக்காக எல்லாரும் வாக்களித்தீர்கள் இல்லையென்றாலும் அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் சென்றடைய வேண்டுமென முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் மகளிருக்கான ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தில் நடைபெறுவதாக கூறினார். மேலும் தலிக் கிறித்துவர்களுக்கு சான்றிதழ் வழங்க உத்தரவிட்டுள்ள தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண