இரு சக்கர வாகன நிறுவனமான ஹோண்டா நேற்று, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட CB200X பைக் மாடலை அறிமுகம் செய்தது. சிறந்த எஞ்சின், சொகுசு என பெயர் பெற்ற ஹோண்டா தனது அட்வென்சர் பைக் மாடலை ரூ.1.44 லட்சத்துக்கு அறிமுகம் செய்துள்ளது. டெல்லியின் எக்ஸ் ஷோரும் விலையாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் செப்டம்பர் முதல் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




ஹார்னெட் 2.0 அடிப்படையாக கொண்டுள்ள இந்த மாடல் பைக், அதிலிருக்கும் எஞ்சின் மற்றும் வடிவமைப்பு அம்சங்களை கொண்டுள்ளது.  ராயல் என்பீல்ட் இமாலயன் மற்றும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் வரிசையில் இடம் பெற்றுள்ளது  CB200X.


BS6 மாடலில் 184சிசி எஞ்சின் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒற்றை சிலிண்டர், காற்று குளிரூட்டல் அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் நீண்ட தூரம் பயணம் செய்தாலும் எஞ்சின் ஹீட் என்ற பிரச்னை இருக்காது என கூறப்பட்டுள்ளது. பவர்டிரெயின் 17 HP,  16 Nm திருப்புவிசை, இன்ஜின் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய மாடல்.





பியர்ல் நைட்ஸ்டார் பிளாக், மேட் செலீன் சில்வர் மெட்டாலிக் மற்றும் ஸ்போர்ட்ஸ் ரெட் ஆகிய வண்ணங்களில் வெளியாகியுள்ளது. இந்த பைக்கின் முக்கிய அம்சமாக அதன் டிஜிட்டல் மீட்டர் பார்க்கப்படுகிறது. இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ள டிஜிட்டல் லிக்குயிட் கிரிஸ்டல் மீட்டர் கன்சோல், தெளிவான ஒரு டிஸ்பிளேவாக இருக்கிறது. கியர் பொசிஷன் இண்டிகேட்டர், சர்வீஸ் டியூ இண்டிகேட்டர் , பேட்டரி வோல்ட்மீட்டர் போன்ற தகவல்களை 5 லெவல் பிரைட்னஸுடன் கொடுக்கிறது.




110மிமீ ரஃப் பேட்டர்ன் முன்பக்க டயர், 140மிமீ பின்பக்க டயர் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மலைப்பகுதி போன்ற கரடுமுரடான பயணத்துக்கு ஏற்ற வகையில் இந்த மாடல் உருவாக்கப்பட்டுள்ளது.  எடை குறைவான 5Yவடிவ அலாய் வீல் பார்வைக்கு அழகான தோற்றத்தை கொடுக்கிறது. நீண்ட சொகுசான ஸ்பிலிட் சீட் கொடுக்கப்பட்டுள்ளது.






Car loan Information:

Calculate Car Loan EMI