கீ லெஸ் ஆக்டிவா ஸ்கூட்டருக்கு எதிர்பார்த்ததை விட கூடுதல் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, 6ஜி மாடல் ஸ்கூட்டரில் பல்வேறு புதிய அம்சங்களை சேர்க்க ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஆக்டிவா ஸ்கூட்டர்:
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் மாடல்களில் ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இருப்பினும், ஒட்டுமொத்த பயனாளர்களின் அனுபத்தையும் மேம்படுத்தும் நோக்கில், ஆக்டிவா ஸ்கூட்டரில் தொடர்ந்து பல்வேறு அப்டேட்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் H-ஸ்மார்ட் டெக்னாலஜி கொண்ட ஸ்மார்ட் கீ வசதி கொண்ட ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டது. அது கார்களில் இருப்பதை போன்ற ஆட்டோ லாக்/அன்லாக், பார்க் செய்த இடத்தை கண்டறிவது மற்றும் கீ லெஸ் ஸ்டார்ட் போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. அந்த ஸ்கூட்டருக்கு எதிர்பார்த்தை காட்டிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரில் பல்வேறு கூடுதல் அம்சங்களை வழங்க ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
புதிய அப்டேட்கள் என்ன?
ஹோண்டா ஷைன் 100 மோட்டார்சைக்கிள் வெளியீட்டு நிகழ்ச்சியின்போது புதிய அப்டேட் பற்றிய தகவல்களை ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா தலைவர், தலைமை செயல் அதிகாரி அடுஷி ஒகாடா வெளியிட்டார். அதன்படி ஆக்டிவா 6ஜி மாடலில், டிஜிட்டல் டிஸ்பிளே, ப்ளூடூத் மற்றும் H ஸ்மார்ட் கீ லெஸ் வசதி ஆகியவை அடங்கும் என ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போதைய மாடலில் ஸ்பீடோமீட்டர், அனலாக் மீட்டர் மற்றும் இண்டிகேட்டர் ஆகியவற்றை பிரதிபலிக்கும் அனலாக் டிஸ்பிளே இருப்பது குறிப்பிடத்தக்கது. புதிய அப்டேட் மூலம், நேரடி போட்டியாளரான TVS ZX SmartXonnect ஸ்கூட்டருக்கு இணையாக ஆக்டிவா 6ஜி மேம்படுத்தப்பட உள்ளது.
விலை விவரம்:
புதிய ஆக்டிவா 6ஜி வேரியண்டின் விலை ரூ.85 ஆயிரம் முதல் ரூ.90 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இந்த வேரியண்ட் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, Activa 6G ஆனது ஸ்டாண்டர்ட், DLX மற்றும் H-Smart வகைகளில் வழங்கப்படுகிறது. அவற்றின் விலைகள் முறையே ரூ.74,536, ரூ.77,036 மற்றும் ரூ.80,537 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மெக்கானிக்கல் மாற்றங்கள்:
வெளிப்புற அமைப்புகளை தவிர வேறு எந்தவித மெக்கானிக்கல் மாற்றங்களும் புதிய வேரியண்டில் மேற்கொள்ளப்படவில்லை. 6G வேரியண்ட் தொடர்ந்து 109.51 cc, 4-ஸ்ட்ரோக் SI இன்ஜின் மூலம் இயக்கப்படும். இது அதிகபட்சமாக 7.8 பிஎஸ் பவரையும், 8.90 என்எம் பீக் டார்க் திறனையும் வழங்கும். இது CVT தானியங்கி பரிமாற்றத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆக்டிவாவில் டெலஸ்கோபிக் முன் ஃபோர்க்குகள் மற்றும் இரு முனைகளிலும் டிரம் பிரேக் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI