ஆகஸ்ட் மாதத்தில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வெளியாக உள்ள இருசக்கர வாகனங்களின் பட்டியலை இந்த தொகுப்பில் அறியலாம். 


ஆட்டோமொபைல் சந்தை:


சொகுசு பயணங்களுக்காக என்ன தான் எத்தனையோ விதமான கார்கள் அறிமுகமானாலும், இருசக்கர வாகனங்கள் என்பது இன்றளவும் பொதுமக்கள் வாழ்வில் தவிர்க்க முடியாததாக உள்ளது. அதன் காரணமாக தான் தொடர்ந்து பல்வேறு இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் மட்டும் இந்தியாவில் டிரையம்ப் ஸ்பீட் 400 மற்றும் ஹார்லி டேவிட்சன் X400 ஆகிய இரண்டு முக்கிய இருசக்கர வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அந்த உற்சாகம் தனிவதற்கு முன்பாகவே ஆகஸ்ட் மாதமும் சில முக்கிய இருசக்கர வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அவற்றின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதில் ஸ்கூட்டர்கள் மற்றும் மின்சார வாகனங்களும் அடங்கும்.


Hero Karizma XMR 210:


ஹீரோ நிறுவனம் தனது ஐகானிக் பைக்குகளில் ஒன்றான கரிஸ்மாவை, லிக்விட் - கூல்ட் இன்ஜின் மூலம் மீண்டும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. Karizma XMR 210 என பெயரிடப்பட்டுள்ள இந்த பைக் வரும் 29ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. இதன் விலை ரூ.1.75 லட்சம் வரை நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஏதர் 450S:


ஏதர் 450X மாடலின் மலிவு விலை வேரியண்டாக ஏதர் 450S மாடல் மின்சார ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சிறிய 3kWh பேட்டரி திறன் கொண்ட இந்த ஸ்கூட்டரில் கூகுள் மேப் அடிப்படையிலான நேவிகேஷனுக்கு பதிலாக, LED கன்சோல் மற்றும் டர்ன் - பை - டர்ன் நேவிகேஷன்  போன்ற அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Royal Enfield Bullet 350:


ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் புல்லட் 350 மாடல் பைக்கின் சோதனை ஓட்டத்தின் போதே, அது தொடர்பான பல்வேறு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. ஜே சீரிஸ் ஃபிளாட்பார்மில் உருவாகப்பட்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த பைக், ஆகஸ்ட் 31ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் விலை ரூ.1.8 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


TVS e-Scooter:


டிவிஎஸ் நிறுவனத்தின் ஐகியூப் எஸ்டி மின்சார வாகனம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஸ்போர்டடி லுக்கில் அந்த நிறுவனத்தின் புதிய மின்சார இருசக்கர வாகனம் ஆகஸ்ட் 23ம் தேதி வெளியாக உள்ளது.


Ola S1 Pro Classic:


ரெட்ரோ வடிவமைப்பிலான மின்சார ஸ்கூட்டர்களை பயன்படுத்தி போர் சளித்து போயிருந்தால், உங்களுக்காகவே கிளாசிக் வேரியண்டில் ஓலா நிறுவனம் S1 Pro Classic கிளாசிக் இருசக்கர வாகனம் இந்த மாதம் 15ம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது.


Honda Sporty 160cc Bike:


ஸ்போர்ட்ஸ் வாகனம் வடிவமைப்பிலான ஹோண்டா நிறுவனத்தின் புதிய பைக்கும் இந்த மாதம் வெளியாக உள்ளது. ஹோண்டா யூனிகார்னின் ஸ்போர்டியர் வெர்ஷனாக தான் இந்த புதிய வாகனம் இருக்கும் என எதிரபார்க்கப்படுகிறது. 


Car loan Information:

Calculate Car Loan EMI