எம்ஜி கார் தயாரிப்பு நிறுவனம் புதிய எஸ்யுவி ரக வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய வாகனச் சந்தையில் இது மிகவும் புதிதான பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.


ஏற்கெனவே ஆஸ்டர் பற்றி பல சிறப்பம்சங்களை இந்த நிறுவனம் தெரிவித்திருந்தாலும் கூட. இப்போது புதிதாக டெயில் லாம்ப்புகள் மற்றும் எல்இடி டிஆர்எல் விளக்குகள் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.


புதிய தி ஆஸ்டர் கார்களில் அறுங்கோண கிரில், எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் டிஆர்எல்லுடன் வந்துள்ளது. மற்றொரு சிறப்பம்சம் வாகனத்தின் கர்வ்ட் ரூஃப்.


டெயில் லேம்ப் காரின் வெளியே துருத்திக் கொண்டிருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அது காரை இன்னும் சற்று அகலமாகக் காட்டுகிறது. சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங், ட்ரைவர் சீட்டின் மேம்படுத்தப்பட்ட வசதிகள் இதன் கூடுதல் சிறப்பம்சம். காரில் பயன்படுத்தப்பட்டுள்ள தி அடாஸ் டெக் ஃபீச்சரும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் லெவல் 2 வசதிகள் உள்ளன. அதாவது அடாப்டிவ் க்ரூயிஸ் கன்ட்ரோல், ஆட்டோ எமர்ஜென்ஸி பிரேக், ஃபார்வர்டு கொலிஷன் வார்னிங், லேன் டிபார்ச்சர் கன்ட்ரோல் ஆகியன லெவல் 2 வசதிகள் எனப்படுகிறது.


அதுமட்டுமல்லாமல் காரில் உள்ள செயற்கை நுண்ணறிவு வசதி (ஆர்ட்டிஃபிஷியல்) வசதி மூலம் மனிதரைப் போன்ற குரலுடன் நீங்கள் உரையாடலாம். தி ஆஸ்டரின் டெக் சூட் ஜியோ இ சிம்மால் இயக்கப்படுகிறது. இருப்பினும், எம்ஜியில் நீங்கள் விரும்பினால் வேறு தொலைதொடர்பு நிறுவனத்தின் சந்தாதாரராகவும் கூட இருக்கலாம். பெட்ரோல் இன்ஜின்கள், ஆட்டோமேட்டிக் ப்ளஸ், மேனுவல் கியர்பாக்ஸ் ஆகியனவற்றையும் ஆஸ்டரில் நீங்கள் எதிர்பார்க்கலாம். 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட் புதிய அம்சம். 160 bhp திறன் கொண்டது.




தி ஆஸ்டர் எம்ஜி MG நிறுவனத்தின் இரண்டாவது எஸ்யுவி வாகனம். ஹெக்டாருக்குப் பின்னர் 4m பிளஸ் மிட் சைஸ் வாகனம் இது. இந்த வாகனத்தை பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்டர் மிட் சைஸ் எஸ்யுவி ரக வாகனங்களில் பல்வேறு சிறப்பம்சங்கள் இருப்பதால் இதுவே சந்தையில் ஏற்கெனவே இருக்கும் பிற கார் நிறுவனங்களின் மிட் சைஸ் எஸ்யுவி ரக வாகனங்களுக்கு சரியான போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




இந்திய ஆட்டோ மொபைல் சந்தையில் மிட் சைஸ் எஸ்யுவிக்களுக்கு சமீப காலமாக மக்கள் மத்தியில் அபிரிமிதமான வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், எம்ஜி கார் தயாரிப்பு நிறுவனம் புதிய எஸ்யுவி ரக வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது எஸ்யுவி ஃபேன்களின் எதிர்பார்ப்பை பல நூறு மடங்கு அதிகப் படுத்தியுள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI