உலகின் முன்னணி மின்சார கார்களில் எலான் மஸ்கின் டெஸ்லா கார்கள் தான் முதலிடம் வகிக்கின்றன. பேட்டரியில் இயங்கும் என்பதுடன், செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்குவது மற்றும் அதில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவை டெஸ்லா காருக்கான வரவேற்பிற்கு முக்கிய காரணங்களாக உள்ளன. உலக அளவில் அந்நிறுவத்தின் மின்சார வாகனங்களை வாங்க வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  இதன் மூலம் கிடைத்த வருவாயின் மூலமாகவே, ஸ்பேஸ்எக்ஸ் எனும் ராக்கெட் நிறுவனத்தை தொடங்கி தற்போது உலக பெரும் பணக்காரராக எலான் மஸ்க் மாறியுள்ளார்.


இந்தியாவில் டெஸ்லா எப்போது வரும் என்கிற எதிர்பார்ப்பும் அடிக்கடி எகிறிக் கொண்டே தான் இருக்கிறது. வரி பிரச்னைகள் குறித்து மத்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக, எலன் மாஸ்க்கே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  விபத்தில்லா போக்குவரத்து என்பதை மையமாக வைத்து தான் டெஸ்லா கார்கள் உருவாக்கப்படுகின்றன. அதேநேரம் அந்த டெஸ்லா நிறுவன கார்களில் அவ்வப்போது பிரச்னை ஏற்படுவதும் வழக்கமாகி உள்ளது.


தொடரும் டெஸ்லா கார் பழுதுகள்:


விண்டோஸ் சாப்ட்வேர் அப்டேட் செய்வதில் ஏற்பட்ட பிரச்சினை காரணாமாக, கடந்த செப்டம்பர் மாதம் டெஸ்லா நிறுவனம் 11 லட்சம் கார்களை திரும்ப பெற்றது. கதவுகள் தானாக மூடுவது, ஓட்டுனர் தொடுதிரையை தொடும்போது முறையாக செயல்படாதது போன்ற பிரச்சினைகளை தீர்க்க, 2017- 2022 வரை தயாரித்து விற்பனை மாடல் 3, 2020-2021 ஆண்டில் தயாரித்த y மாடல், Sமாடல், X மாடல் கார்களை திரும்ப பெறுவதாக அறிவித்தது. முன்னதாக, காரின் சிபியு-க்களில் ஏற்படும் அதிகப்படியான சூடு காரணமாக ஏற்படும் தொடுதிரை பிரச்சினையை தீர்ப்பதற்காக, கடந்த மே மாதமும் 1.3 லட்சம் டெஸ்லா கார்கள் திரும்பப் பெறப்பட்டன.


திரும்பப் பெறப்படும் 3.21 லட்சம் டெஸ்லா கார்கள்:


இந்நிலையில், 2020 முதல் 2023 வரையிலான மாடல் 3 மற்றும் Y மாடலை சேர்ந்த, 3 லட்சத்து 21,000 ஆயிரம் கார்களை திரும்பப் பெறுவதாக டெஸ்லா நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட மாடல் கார்களின் பின்பகுதியில் உள்ள விளக்குகள் சரியாக எரியவில்லை என வாடிக்கையாளர்களிடமிருந்து, பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் டெஸ்லா நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.


தவிக்கும் எலான் மஸ்க்:


ஏற்கனவே கடன் வாங்கி ரூ.3.5 லட்சம் கோடிக்கு டிவிட்டர் நிறுவனத்தை கைப்பற்றிய எலான் மஸ்க், ஊழியர்களை நீக்கியது போன்ற பல்வேறு அதிரடி நடவடிக்கைகளால் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில், அவரது டெஸ்லா நிறுவன கார்களிலும் அடுத்தடுத்து பழுதுகள் ஏற்படுவது, எலான் மஸ்கிற்கு தலைவலியாக மாறியுள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI