Long Range Electric Cars: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிக ரேஞ்ச்/மைலேஜ் வழங்கக் கூடிய, டாப் 5 மின்சார கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


மின்சார கார்களின் ரேஞ்ச்:


நிலைத்தன்மையை கருத்தில் கொண்டு உலகம் முழுவதும் மின்சார கார்கள் அதிகம் பிரபலமடைந்து வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் மின்சார கார்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில்,  சிறப்பாகச் செயல்படும் மற்றும் நீண்ட தூரம் பயணிக்கக்கூடிய மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. அதன்படி தொழில்நுட்ப மேம்பாடுகள் காரணமாக, பல மின்சார கார்கள் இப்போது ஈர்க்கக்கூடிய ஓட்டுநர் வரம்புகளை வழங்குகின்றன. 2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் கிடைக்கும் அதிக ரேஞ்ச் கொண்ட மின்சார கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. இது உங்களுக்கான சரியான காரை தேர்வு செய்ய உதவலாம்.


கியா EV6


Kia EV6 என்பது ஒரு மின்சார கிராஸ்ஓவர் SUV கார் மாடல் ஆகும். இது ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 708 கிலோ மீட்டர் தூரத்திற்கு இடைநிற்றல் இன்றி ஓடும் என உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் 77.4 kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் தொடக்க விலை ரூ.60.95 லட்சம் முதல், அதிகபட்சமாக ரூ.65.95 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


ஹூண்டாய் ஐயோனிக் 5:


Hyundai loniq 5 இந்தியாவில் கிடைக்கும் மற்றொரு மின்சார SUV கார் மாடலாகும். இதில் 72.6 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், இடைநிற்றல் இன்றி 631 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.  இந்தியாவில் ஹுண்டாய் ஐயோனிக் 5 கார் ரூ.46.05 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கிறது.


BMW i4:


BMW i4 என்பது ஒரு மின்சார செடான் கார் மாடல் ஆகும். இதில் 83.9 kWh பேட்டரி பேக் இடம்பெற்றுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 590 கிலோ மீட்டர் தூரம் இடைநிற்றல் இன்றி ஓடும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் அதன் தொடக்க விலை ரூ.72.50 லட்சம் எனவும், அதிகபட்ச விலை ரூ 77.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


BYD Atto 3


BYD Atto 3 என்பது இந்தியாவில் கிடைக்கும் மற்றொரு SUV மாடலாகும். இதில் வழங்கப்பட்டுள்ள 60.48 kWh பேட்டரி பேக்கை,  ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 521 கிலோ மீட்டர் தூரம் ஓடும் திறன் கொண்டது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதன் தொடக்க விலை ரூ 33.99 லட்சம் ஆகவும், அதிகபட்ச விலை ரூ 34.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


MG ZS EV


MG ZS EV கார் மாடலில் வழங்கப்பட்டுள்ள 50.3 kWh பேட்டரி பேக்கை,  ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 461 கிமீ தூரம் ஓட்டும் வரம்பை வழங்குகிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதன் தொடக்க விலை ரூ.18.98 லட்சம் எனவும், அதிகபட்ச விலை ரூ.25.20 லட்சம் (எக்ஸ்- ஷோரூம்) வரை கிடைக்கிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI