Diwali Offers on Cars 2023: விழாக்கால சலுகையாக பல்வேறு முக்கிய ஆட்டோமொபைல் நிறுவனங்களும் சலுகையை அறிவித்துள்ளன.


ஆட்டோமொபைல் தீபாவளி சலுகை (Diwali 2023 Car Offers):


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்களை கவரும் விதமாகவும், விற்பனையை ஊக்குவிக்கும் வகையிலும் ஏராளமான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சலுகையை அறிவித்துள்ளன. பண தள்ளுபடிகள், எக்ஸ்சேஞ்ச் போனஸ்கள், கார்ப்பரேட் சலுகைகள் மற்றும் சிறப்பு பண்டிகை என பல்வேறு வடிவங்களில் இந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஜீப், மஹிந்திரா, ஸ்கோடா  மற்றும் சிட்ரோயன் ஆகிய நிறுவனங்கள் தங்களது குறிப்பிட்ட கார் மாடல்களுக்கு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்துள்ளன. அதன்படி,  இந்த பண்டிகைக் காலத்தில் கவர்ச்சிகரமான சலுகைகளுடன் கிடைக்கும் எஸ்யுவி மாடல்கள்(New SUV Car Offers) கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. குறைந்த சலுகையில் இருந்து அதிகபட்ச சலுகை வரையிலான விவரங்களை பயனாளர்கள் இங்கே அறியலாம்.


Mahindra Bolero Neo


முதலில்  TUV300 என அழைக்கப்பட்ட இந்த மாடல் பின்பு பொலிரோ நியோ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த காம்பாக்ட் SUV ஆனது அசல் பொலிரோ SUV ஐ விட சில கூடுதல் அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு மஹிந்திரா டீலர்கள் இந்த மஹிந்திரா எஸ்யூவிக்கு 50,000 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி அறிவித்துள்ளனர்.


Mahindra Bolero


பொலேரோ மாடல் மஹிந்திரா நிறுவனத்தால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இருப்பினும் தற்போது வரை இந்த மாடலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.  இந்த சூழலில் தான் பொலேரோ மாடலுக்கு தீபாவளியை முன்னிட்டு ரூ.70,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.


Maruti Suzuki Jimny Zeta


Zeta என்பது மாருதி ஜிம்னி மாடலின் நுழைவு நிலை வேரியண்ட் ஆகும் . ஜிம்னி ஜீட்டா தற்போது ரூ. 50,000 பிளாட் தள்ளுபடியுடன் கிடைக்கிறது. மேலும் ரூ. 50,000 மதிப்பிற்கு எக்ஸ்சேஞ்ச் அல்லது லாயல்டி போனஸ் வழங்கப்படுகிறது. Zeta வேரியண்ட்டின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆகிய இரண்டிற்கும் இந்த தள்ளுபடிகள் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Volkswagen Taigun:


வோக்ஸ்வேகன் டைகன் டாப் எண்ட் வேரியண்ர்கள் அதிகபட்சமாக சுமார் ரூ. 1 லட்சம் வரை தள்ளுபடி பெறுகின்றன, அதே சமயம் தொடக்க நிலை வேரியண்ட்களுக்கு ரூ.65,000 மதிப்புள்ள பலன்கள் கிடைக்கும்.


Mahindra XUV300


தற்போது ஸ்டாக்கில் உள்ள மஹிந்திரா XUV300 மாடல் கார்களுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வரையில் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 


Jeep Meridian


நிலுவையில் உள்ள ஸ்டாக்கின் அடிப்படையில் ஜீப் மெரிடியன் கார் மாடலுக்கு ஒரு லட்சம் தொடங்கி ஒரு லட்சத்து 30 ஆயிரம் வரை சலுகை வழங்கப்படுகிறது.


Jeep Compass


ஜீப் காம்பஸ் மாடலின் அனைத்து 4WD வேரியண்ட்களுக்கும் அதிகபட்சமாக ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.


Skoda Kushaq


நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஸ்கோடா நிறுவனத்தின் குஷக் மாடல்களின் அனைத்து டாப் எண்ட் வேரியண்ட்களுக்கு 1.5 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.  


Citroen C5 Aircross


சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் மாடலுக்கு அதிகபட்சமாக 2 லட்ச ரூபாய் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.


Mahindra XUV400


மஹிந்திரா நிறுவனத்தின் XUV400 EV இன் ஆரம்ப யூனிட்கள் இன்னும் ரூ.3.5 லட்சம் வரையிலான  தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.


ALSO READ | Diwali 2023 Car Offers: தீபாவளி சலுகை - செடான் மாடல் கார்களின் விலையில் ரூ.90 ஆயிரம் வரை தள்ளுபடி


Car loan Information:

Calculate Car Loan EMI