Citroen Basalt vs C3 Aircross: சிட்ரோயன் பசால்ட் மற்றும் சி3 ஏர்கிராஸ் கார் மாடல்கள், ஒப்பீட்டு விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


சிட்ரோயன் பசால்ட் vs சி3 ஏர்கிராஸ்:


இந்தியாவிற்கான C-க்யூப்ட் திட்டத்தின் கீழ் சிட்ரோயனின் நான்காவது தயாரிப்பாக பசால்ட் கார் மாடல், அண்மையில் அறிமுகமானது. இது அந்நிறுவனத்தின் C3 Aircross SUV உடன் மிக நெருக்கமாக ஒத்துப்போகிறது என்றாலும், இரண்டு மாடல்களுக்கும் இடையே சில அடிப்படை வேறுபாடுகள் உள்ளன. பசால்ட் மற்றும் C3 ஏர்கிராஸ் கார்களின் பரிமாணங்கள், சில அம்சங்கள் மற்றும் பவர்டிரெய்னிலும் வேறுபடுகின்றன. அவை கீழே விவரிக்கப்பட்டுள்ளன.


சிட்ரோயன் பசால்ட் vs சி3 ஏர்கிராஸ்: வீல்பேஸ்


பசால்ட் 4,352 மிமீ நீளம், 1,765 மிமீ அகலம், 1,593 மிமீ உயரம் மற்றும் 2,651 மிமீ வீல்பேஸ் கொண்டுள்ளது. அதாவது C3 ஏர்கிராஸின் வீல்பேஸை விட 20 மிமீ குறைவாக கொண்டுள்ளது. இருப்பினும் ஒட்டுமொத்த நீளம் 29 மிமீ அதிகரித்துள்ளது. மேலும்,  C3 Aircross ஐ விட அகலத்தில் 31mm மற்றும் உயரத்தில் 76mm குறைவாக உள்ளது. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், சாய்வான கூரையில் இருந்தாலும், 444-லிட்டர் பூட் ஸ்பேஸ் கொண்ட C3 ஏர்கிராஸின் 5-சீட்டர் எடிஷன்களை விட, 470-லிட்டருடன் பசால்ட் அதிக பூட் ஸ்பேஸ் கொண்டுள்ளது. இருப்பினும், இது C3 ஏர்கிராஸின் 17-இன்ச் யூனிட்களுக்கு மாறாக சிறிய 16-இன்ச் சக்கரங்களில் பயணிக்கிறது. மேலும் கிரவுண்ட் கிளியரன்ஸ் 180 மிமீ என்ற நிலையில், 20 மிமீ குறைந்துள்ளது.


சிட்ரோயன் பசால்ட் vs சி3 ஏர்கிராஸ்: பிரத்யேக அம்சங்கள்


C3 Aircross-ஐப் பாதித்த அனைத்து அம்சக் குறைபாடுகளும், Basalt மூலம் தீர்க்கப்பட்டுள்ளன. அதோடு,  இந்த மேம்படுத்தல்கள் C3 Aircross-லும் பகிரப்படுகிறது. அதன்படி, எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், ஒரு ஆட்டோ ஏசி யூனிட், பவர்ட் மிர்ரர் அட்ஜஸ்ட்மெண்ட்ஸ், பவர் ஜன்னல் பொத்தான்களை கதவுகளுக்கு இடமாற்றம் செய்தல், முன் ஸ்லைடிங் சென்டர் ஆர்ம்ரெஸ்ட் மற்றும் தரையில் பொருத்தப்பட்ட பின்புற ஏசி வென்ட்கள் ஆகியவை இப்போது சி3 ஏர்கிராஸிலும் வழங்கப்பட்டுள்ளது.


ஆனால் வயர்லெஸ் சார்ஜர், பின் இருக்கைகளுக்கு அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய தை (Thigh) சப்போர்ட் மற்றும் பின்புற இருக்கைகளுக்கு காண்டூர்டு ஹெட்ரெஸ்ட்கள் ஆகியவை பசால்டிற்கான பிரத்யேக அம்சங்களாக நீடிக்கின்றன. பசால்ட்டின் டேஷ்போர்டில் சில சாஃப்ட்-டச் மெட்டீரியல்களும் உள்ளன. அதே நேரத்தில் C3 ஏர்கிராஸ் 7-சீட்டர் எடிஷன்களுக்கு ரூஃபில் பொருத்தப்பட்ட AC வென்ட்டையும் பெறுகிறது.


சிட்ரோயன் பசால்ட் vs சி3 ஏர்கிராஸ்: பவர்டிரெய்ன் ஆப்ஷன் 


110hp, 1.2-லிட்டர் மூன்று சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பசால்ட் மற்றும் C3 ஏர்கிராஸ் இடையே 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இருப்பினும்,  பசால்ட் கூடுதலாக 82 ஹெச்பி, அதே இன்ஜினின் நேட்சுரல் ஆஸ்பிரேஷன் எடிஷனை பெறுகிறது. இது மேனுவல் கியர்பாக்ஸுடன் மட்டுமே கிடைக்கும். இந்த இன்ஜினின் விவரக்குறிப்புகள் நிச்சயமாக அதன் ஸ்டேண்டர்டிற்கு ஏற்றதாக இல்லாவிட்டாலும்,  பசால்ட்டின் மிகவும் தீவிரமான தொடக்க விலை இலக்கை அடைய உதவுகிறது.


சிட்ரோயன் பசால்ட் vs சி3 ஏர்கிராஸ்: விலை விவரங்கள்


பசால்ட் கார் மாடலின் தொடக்க விலை ரூ.7.99 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.  சி செக்மெண்டில் கிடைக்கும் குறைந்த விலை வாகனமாக மட்டுமின்றி, C3 Aircross மாடலை காட்டிலும் ரூ.2 லட்சம் குறைந்த விலையில் கிடைக்கிறது. Basalt இன் முழு விலைப்பட்டியல் இந்த மாதத்தின் பிற்பகுதியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI