செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் கடந்த 25 ஆண்டுகளாக இயங்கிவந்த மகிழுந்து உற்பத்தி செய்யும், சென்னை ஃபோர்டு தொழிற்சாலையானது, கடந்த 10 ஆண்டுகளாக இழப்பைச் சந்தித்து வருவதாகக்கூறி, தொழிற்சாலையை வரும் ஜூன் மாதத்துடன் நிரந்தரமாக மூடப்போவதாக அதன் நிர்வாகம் அறிவித்துள்ளதால், அங்குப் பணிபுரியும் தொழிலாளர்கள் அதிர்ச்சியும், கலக்கமும் அடைந்துள்ளனர்.
என்னதான் ஆனது ஃபோர்டு நிறுவனத்திற்கு
அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, இந்தியாவில் சுமார் 20 ஆண்டுகளாக வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது.இந்த ஆலைகளில் வருடத்திற்கு நான்கு லட்சம் கார்கள் உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலையில், தற்போது 80,000 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து பெரும் நஷ்டத்தில் இயங்கி வந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் அந்நிறுவனத்திற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தங்களது பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என ஊழியர்கள் கடந்த மாதம் தொடர்ந்து 30 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டது வந்தனர். இந்நிலையில் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் உற்பத்தியை கடந்த 10 நாட்களுக்கு மேலாக செய்து வந்த நிலையில், ஃபோர்டு தொழிற்சாலை வருகின்ற ஜூலை மாதம் 31ஆம் தேதியுடன் மூடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி கார்
இதனை அடுத்து கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த சென்னை மறைமலைநகர் ஃபோர்டு தொழிற்சாலையில் ஃபோர்டு கால் உற்பத்தி இன்றுடன் முடிவடைந்தது. தனது கடைசி மாடல் காரான ECO-- ஸ்போர்ட்ஸ் காரை செய்து முடித்தது சென்னை தொழிற்சாலை. தனது கடைசி காரை தயாரித்து முடித்த போர்டு நிறுவனத்தின் காரை ஊழியர்கள் அலங்கரித்து கண்ணீர் மல்க தொழிற்சாலைக்கு விடை கொடுத்தனர். பல ஆயிரக்கணக்கான கார்களை இந்தியாவிலும் வெளிநாட்டிலும் ஏற்றுமதி செய்த இந்த தொழிற்சாலைக்கு வருகின்ற ஜூலை 31ஆம் தேதி அன்று மூடப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Car loan Information:
Calculate Car Loan EMI