Royal Enfield: இந்திய சந்தையில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் 7 மாடல்களில் தங்களது இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து வருகின்றன.
ராயல் என்ஃபீல்ட் மோட்டார்சைக்கிள்:
இங்கிலாந்தைச் சேர்ந்த ராயல் என்ஃபீல்ட் சைக்கிள் கம்பெனி நிறுவனம், கடந்த 1901ம் அண்டு முதல் தனது வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. வரலாற்றில் நீண்ட காலமாக மோட்டார்சக்கிளை வடிவமைத்து வரும் நிறுவனம் என்ற பெருமையை கொண்டுள்ள ராயல் என்ஃபீல்ட், ஆஃப் ரோட் பைக்குகளுக்கு மிகவும் பிரசித்தி பெற்றது. இதன் காரணமாகவே, இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ராயல் என்ஃபீட்ல் நிறுவனம் தனக்கான இடத்தை வலுவாக உறுதி செய்துள்ளது. அதை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் சீரான இடைவெளியில் தொடர்ந்து இருசக்கர வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி, இந்திய சந்தையில் கிடைக்கும் ராயல் என்ஃபீல்ட் மோட்டார்சைக்கிள்களின் மாடல்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
ராயல் என்ஃபீல்ட் - புல்லட்:
ராயல் என்ஃபீல்டு புல்லட் 1948 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து உற்பத்தியில் இருக்கும் மோட்டார்சைக்கிள் ஆகும். இது மிக நீண்ட மற்றும் மாறாத உற்பத்தி ஓட்டத்தைக் கொண்டுள்ள வாகனமாகும். புதிய தலைமுறை Bullet 350 கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது. நான்கு வண்ணங்களில் கிடைக்கும் இந்த வாகனமானத்தின் தொடக்க விலை 1.73 லட்சத்தில் தொடங்கி அதிகபட்சமாக 2.15 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ராயல் என்ஃபீல்ட் கிளாசிக்:
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மற்றும் கிளாசிக் 500 மாடல்கள், 2009 ஆம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஒரிஜினல் ராயல் என்ஃபீல்டு புல்லட்டின் நவீனமயமாக்கப்பட்ட பதிப்பாக இருப்பதால், வடிவமைப்பில் ஒரே மாதிரியான தோற்றத்திற்காக புல்லட்டுடன், கிளாசிக் மாடல் பலர குழப்பமடைய செய்யும். கிளாசிக் 350 மாடல் விலை 1.93 லட்சத்தில் தொடங்கி 2.25 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிளாசிக் 500 மாடல் விலை 1.79 லட்சத்தில் தொடங்கி 2.16 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ராயல் என்ஃபீல்ட் ஹண்டர்:
ராயல் என்ஃபீல்டு ஹண்டர் மோட்டார் சைக்கிள் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோட்ஸ்டர் மாடல் ஆகும். இது 20.2 பிஎச்பி மற்றும் 27 என்எம் டார்க்கை உற்பத்தி செய்யும், 349சிசி பிஎஸ்6 இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இதன் விலை 1.79 லட்சம் தொடங்கி 2.07 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ராயல் என்ஃபீல்ட் ஷாட்கன்:
ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 வாகனமானது 648cc இன்ஜினை கொண்டுள்ளது. இதற்கான முன்பதிவுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இதன் விலை 4.25 லட்சத்தில் தொடங்கி 4.40 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன்:
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் என்பது ராயல் என்ஃபீல்டு தயாரித்த ஒரு சாகச சுற்றுலா மோட்டார்சைக்கிள் ஆகும். இது பிப்ரவரி 2015 இல் வெளிப்படுத்தப்பட்டது மற்றும் 2016 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதன் விலை 2.14 லட்சம் தொடங்கி 2.23 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இன்டர்செப்டர் மற்றும் கான்டினென்டல் ஜிடி:
ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் இன்டர்செப்டர் மற்றும் காண்டினெண்டல் ஆகிய இரண்டு வாகனங்களுமே, கடந்த 2018ம் ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டன. இன்டர்செப்டர் விலை 3.03 லட்சம் தொடங்கி 3.31 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கான்டினெண்டல் விலை 3.19 லட்சம் தொடங்கி 3.44 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ராயல் என்ஃபீல்ட் மீடியர்:
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு மீடியர் என்ற பெயரில் புதிய க்ரூஸர் மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்தியது. இதன் விலை 2.42 லட்சம் தொடங்கி 2.69 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI