R K Suresh: அருவா எடுப்பது தான் பெண்களின் தைரியமா? - காடுவெட்டி படத்துக்கு குவியும் கண்டனம்!

காடுவெட்டி படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளுக்காக நடிகர் ஆர் கே சுரேஷ் மீதும், படக்குழுவினர் மீதும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

Continues below advertisement

பள்ளி மாணவிகளை அரிவாள் எடுக்கச் சொல்லும் வகையிலான காட்சிகள் படத்தின் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

ஆர்.கே சுரேஷ்

தயாரிப்பாளர் ஆர்.கே சுரேஷ் பாலா இயக்கிய தாரை தப்பட்டை படத்தில் வில்லனாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பில்லா பாண்டி , மருது உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ஆருத்ரா மோசடி வழக்கில் ஆர். கே சுரேஷ் ஈடுபட்டதாக அவர் மீது வழக்கத் தொடுக்கப்பட்டது. விசாரணையைத் தவிர்க்க ஆர்.கே சுரேஷ் வெளிநாட்டிற்கு தப்பி ஓடியதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக ஆர்.கே.சுரேஷ் கொடுத்த விளக்கத்தின்படி, தான் எங்கேயும் ஓடவில்லை என்றும் இந்த வழக்கு திட்டமிட்டு தன் மேல் தொடுக்கப் பட்டது என்று அவர் கூறியிருந்தார். மேலும் தான் சினிமாவில் 15 ஆண்டுகளாக இருந்து வருவதாகவும், இதுவரை தான் கொடுத்த செக் பவுன்ஸ் ஆனது என்று ஒரு வழக்குகூட தன் மீது இல்லை என்று அவர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

யுவனுடன் மோதல்

ஆர்.கே.சுரேஷ் தன் நடிப்பில் உருவாகும் தென்மாவட்டம் படத்தின் அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார். இந்தப் படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதாக போஸ்டரில் இடம்பெற்றிருந்தது. ஆனால் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தான் இந்தப் படத்திற்கு இசையமைக்கவில்லை என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். தொடர்ந்து ஆர் கே. சுரேஷ் யுவனுக்கு பதில் அளித்தார். இந்தப் படத்தில் நீங்கள் இசையமைப்பதாக ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுள்ளீர்கள் என்று அவர் கூறினார். இந்த பிரச்சனையில் தெளிவான காரணங்கள் எதுவும் வெளியே தெரியவில்லை ஆனால் சிறிது நேரத்திற்குப் பின் தென்மாவட்டம் படத்தில் யுவன் இசையமைக்கவில்லை என்று ஆர்.கே.சுரேஷ் தெரிவித்தார்.

காடுவெட்டி

தற்போது சோலை ஆறுமுகம் இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள காடுவெட்டி படம் திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. மறைந்த பாமக தலைவர் காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்திய இந்தப் படத்தின் ட்ரெய்லரில் காட்சிகள் சர்ச்சைக்குரிய வகையில் இடம்பெற்றிருந்தது. காடுவெட்டி படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு இருக்கும் நிலையில் இதில் சில காட்சிகள் கடும் கண்டனத்தை பெற்றுள்ளது.

அதில் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் தன்னிடம் வம்பு செய்தவர்களை அரிவாள் கொண்டு வெட்டுவது போலவும், அதை ஆர்.கே.சுரேஷ் ஆதரிப்பது போலவும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி விமர்சனத்தை பெற்று வருகிறது. பள்ளி மாணவியை தைரியமாக இருக்க சொல்வதில் தவறில்லை. ஆனால் அரிவாள் எடுத்து வெட்ட வேண்டும், இதுபோன்ற தாக்குதல் நடத்தினால் தான் சீண்ட மாட்டார்கள் என சொல்வதெல்லாம் வளரும் பிள்ளைகள் நெஞ்சில் வன்மத்தை விதைப்பது என இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Continues below advertisement
Sponsored Links by Taboola