Selvaragavan: செல்வராகவன் ஒரு காசிப் கிங்.. நேர்காணலில் உண்மையை போட்டு உடைத்த சகோதரிகள்..!

செல்வராகவன் ஒரு காசிப் கிங் என அவரின் தங்கையான கார்த்திகா தேவி தெரிவித்து இருக்கிறார். 

Continues below advertisement

செல்வராகவன் ஒரு காசிப் கிங் என அவரின் தங்கையான கார்த்திகா தேவி தெரிவித்து இருக்கிறார். 

Continues below advertisement

இது குறித்து பிஹைண்ட் வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர், “செல்வராகவன் எங்கிருந்தாவது இருந்து வருகிறார் என்றால், அம்மாவை போன் செய்து அழைத்து விடுவார். இருவரும் இணைந்து மணிக்கணிக்கில் காசிப் பேசுவார்கள். அங்கு பேசுவதை வைத்துக்கொண்டு, எனக்கு போன் உன் வீட்டில் இந்த பிரச்னையாமே.. உன்னை அப்படி செய்து விட்டார்களாமே என்று கேட்பார். அப்படி ஒரு சீரியல் டைரக்டர் செல்வராகவனுக்குள் இருக்கிறார்.” என்றார். 


தொடர்ந்து பேசிய செல்வராகவனின் மற்றொரு சகோதரியான விமலா கீதா..  “என்னிடம் போன் செய்து கார்த்திகா உன்னை பற்றி சொல்லுகிறாள் என்று கேட்பார். நான் சரி பராவாயில்லை விடுடா... என்றால்... அது எப்படி  விட முடியும்.... உனக்கு கொஞ்சம் கூட கோபம் வரவில்லையா.. என்று எங்களுக்குள் சண்டையை மூட்டி விடுவார்.” என்றார். 

 

செல்வராகவன் தற்போது தனுசை வைத்து  ‘நானே வருவேன்’ படத்தின் பின்னணி வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணைந்திருப்பதால் இந்தப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருக்கும் இந்தப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்து இருக்கிறார்.  ‘பீஸ்ட்’  ‘ சாணி காயிதம்’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலமாக நடிகராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ள செல்வராகவன் இந்தப்படத்திலும் நடித்து இருக்கிறார்.  

 

 

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola