இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி  வசூலிக்க விலக்கு கேட்ட நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தச் சூழலில் ரோல்ஸ் ராய்ஸ் காரை அனைவரும் வாங்க முடியாது என்ற செய்தி மக்கள் மத்தியில் உள்ளது. அத்துடன் இந்தக் காரை வாங்குவதற்கு சில சமூகத்தகுதி மற்றும் அந்தஸ்து ஆகியவை வேண்டும் என்ற செய்தி பரவலாக அனைத்து மக்களிடம் உள்ளது.


மற்றொரு பக்கம் அந்த நிறுவனத்தில் இருக்கும் ஒரு சில கார் தான் எல்லாரும் வாங்கமுடியும். சில முக்கியமான வகை கார்கள் சமூதாயத்தில் அந்தஸ்து உடையவர்களுக்கு மட்டுமே உண்டு என்ற செய்தியும் மக்களிடம் அதிகமாக பரவி வருகிறது. இதன் உண்மை தன்மை தொடர்பாக ரோல்ஸ் ராய்ஸ் காரின் சென்னை டீலரிடம் கேட்டப்போது, “ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்க எந்தவித சமூதாய தகுதியும் தேவையில்லை. உரிய பணம் வைத்திருந்தால் போதும் உடனடியாக இந்த காரை வாங்கலாம்” எனத் தெரிவித்தார். 




மேலும் ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு நிறுவனமும் தன்னுடைய கார் அனைத்து மக்களிடம் செல்லவேண்டும் என்பதற்காக தான் பயன்படுத்தப்பட்ட கார்களையும் தன்னுடைய தளத்தில் விற்க ஆரம்பித்துள்ளது. புதிய கார் வாங்கும் அளவிற்கு பணம் வசதி இல்லாதவர்கள் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்க வழி வகை செய்துள்ளது. 


ரோல்ஸ் ராய்ஸ் புதிய கார்களை பொருத்தவரை இந்தியாவில் 6.27 கோடி ரூபாய் முதல் தொடங்குகிறது. அத்துடன் இதை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதற்கான வரியும் சேர்வதால், இதன் விலை இன்னும் சற்று அதிகரிக்கிறது. வெளிநாட்டிலிருந்து ஒரு சில மாடல் கார்களை இறக்குமதி செய்ய வேண்டும் என்பதால்தான் அதிகமாக யாரும் இதை வாங்க விரும்பவில்லை. எனவே தான் தற்போது இந்தியாவில் மிகவும் குறைவானவர்கள் இதை வைத்திருக்கின்றனர். அதற்கும் சமூதாய அந்தஸ்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. 




ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தன்னுடைய 1970-ஆம் ஆண்டு விளம்பர டேக் லைனிலேயே இந்த விஷயத்தை தெளிவாக கூறியிருந்தது. அந்த விளம்பரத்தில், “Apart from money, what do you need to own a Rolls-Royce?” என்ற விளம்பரத்தில் பணம்தான் முக்கியம் மற்றும் அத்துடன் எல்லோரிடமும் இருக்கும் நல்ல குணம் இருந்தால் வாங்கலாம் என்று கூறியிருந்தது. அதேபோல் 1990-ஆம் ஆண்டில் வெளியான விளம்பரத்தில், “It really doesn’t matter whether you buy a Rolls-Royce or lease a Rolls-Royce. What matters is that you drive one” என்று கூறப்பட்டிருந்தது.


அதாவது நீங்கள் புதிய காரை வாங்குகிறீர்களோ அல்லது வாடகைக்கு எடுக்கிறீர்களோ என்பது முக்கியமல்ல, நீங்கள் ரோல்ஸ் ராய்ஸ் காரை ஓட்டுவதே முக்கியம்” எனக் கூறியது. அப்போது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் முதல்முறையாக லீஸுக்கு விடும் முறை மற்றும் பயன்படுத்தப்பட்ட  கார்களை விற்க அப்போது இந்த விளம்பரத்தை வெளியிட்டது. இதிலிருந்தே அந்த நிறுவனத்தின் நோக்கம் அனைத்து மக்களிடம் தன்னுடைய காரை கொண்டு சேர்ப்பதுதான் என்பது தெளிவாக தெரிகிறது. ஆகவே பணம் வைத்திருந்தால் நீங்களும் ரோல்ஸ் ராய்ஸ் காரின் உரிமையாளராக ஆகலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: மதன் வைத்திருக்கும் ‛ஆடி ஏ6’... சொகுசு கார் இல்லையா...? அக்குவேரா, ஆணிவேரா பார்க்கலாம்!


Car loan Information:

Calculate Car Loan EMI