இணையம் என்றாலே கூகுள் என்றாகிவிட்டது. எந்த தேடலாக இருந்தாலும் கூகுள் தேடல் தான் நமக்கு கைகொடுக்கிறது. யூடியூப், ஜிமெயில் என கூகுள் மேலும் சில இணையப் பயன்பாடுகளையும் நிர்வகித்து வருகிறது. இப்படி பல தகவல்களை தன்னுடைய தேடுபொறியில் இருந்து வெளியிடும் கூகுளுக்கு காப்பிரைட்ஸ் பிரச்னை வருவதும் உண்டு. அப்படியான ஒருசெய்தி பதிப்புரிமை விவகாரத்தில் கூகுள் நிறுவனத்துக்கு ரூ.4400 கோடி அபராதம் விதித்துள்ளது பிரான்ஸ் ஒழுங்குமுறை ஆணையம்.


கடந்த ஆண்டு செப்டம்பரில் செய்தி நிறுவனமான ஏஜென்சி பிரான்ஸ் பிரஸ் வழக்கு ஒன்றை பதிவு செய்தது. அதில் கூகுளில் வெளியாகும் செய்திகள், படங்கள், கட்டுரைகளுக்கு உரிய சன்மானம் வழங்க வேண்டும் என்றும். ஆனால் கூகுள் அப்படி எதுவும் வழங்கவில்லை என குறிப்பிடப்பட்டது. மேலும், செய்தி பத்திரிகைகள் போதிய விற்பனை இல்லாமல் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன.




ஆன்லைன் மூலமாக செய்திகளை வழங்கும் கூகுள் அதற்கான சன்மானத்தை உரிய செய்தி நிறுவனங்களுக்கு வழங்குவதில்லை. ஆனால் இணையதள விளம்பரம் மூலம் கூகுள் மட்டும் வருவாய் ஈட்டுகிறது என்றும் புகாரில் குறிப்பிட்டனர். இந்த விவகாரத்தில் இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி சமரசமாக ஒரு தீர்வை எட்டுங்கள் என முடிவு கூறப்பட்டது. இதற்கு தலையாட்டிய கூகுள், 2020 நவம்பரில் தனி நபர் ஒப்பந்தம் செய்வதாகவும், இனிமேல் பதிப்புரிமை சன்மானத்தை வழங்குவோம் ஒப்பந்தம் போட்டது. ஆனால் அதன்பின் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.


இந்த விவகாரத்தில்தான் தற்போது கூகுளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  பிரான்சு நாட்டின் போட்டி ஒழுங்கமைப்பு ஆணையம் இந்த அபராதத்தை விதித்துள்ளது. இது குறித்து தெரிவித்த ஆணையத்தின் தலைவர், இஸபெல் டி சில்வா, எங்கள் அமைப்பு விதித்துள்ள அதிகபட்ச  அபராதம் இது. பதிப்புரிமை பெற்ற செய்திகளை வழங்கும் கூகுள் அதற்கான சன்மானத்தை தொடர்புடைய செய்தி நிறுவனங்களுக்கு வழங்குவதில்லை. இந்த அபராதத்தையும் செலுத்தாமல் கூகுள் தவறினால், ஒரு நாளைக்கு ரூ.7.9 கோடி என்ற தொகையுடன் கூடுதலாக அபராதத்தை செலுத்த நேரிடும் என்றார்.




முன்னதாக 2020-ஆம் ஆண்டு இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென போட்டி ஒழுங்கமைப்பு ஆணையம் கூகுளை நாடியுள்ளது. ஆனால் கூகுள் தலையசைக்கவில்லை. அதேபோல் ஐரோப்பிய யூனியன் பிறப்பித்த டிஜிட்டல் விதிகளையும் கூகுள் கடைபிடிப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


டிஜிட்டலில் இயங்கும் நிறுவனங்களுக்கு அந்தந்த நாடுகள் சில விதிமுறைகளை விதித்துள்ளன. இந்தியாவிலும் புதிய டிஜிட்டல் விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த விதிகளை கடைபிடிப்பதில்தான் பேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் போன்ற நிறுவனங்கள் முரண்டு பிடித்து வருகின்றன. 


Broadband Plan Jio Fiber | Jio Fiber-இல் எது பெஸ்ட்? போஸ்ட்பெய்டா? ப்ரீபெய்டா? ப்ளான் விவரங்கள் என்னென்ன?