பிஎம்டபள்யூ நிறுவனம் தனது  X1 கார் மாடல் சீரிஸ் வரிசையில் புதியதாக, X1 sDrive18i M கார் மாடல் ஸ்போர்ட்ஸ் வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்த விற்பனை வரும் ஜுன் மாதத்தில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதிய X1 சீரிஸ் வேரியண்ட் அறிமுகம்:


சொகுசு கார்களுக்கு பெயர் போன ஆட்டோமொபைல் நிறுவனமான பிஎம்டபள்யூ, இந்தியாவில் ஏற்கனவே X1 சீரிசில் இரண்டு கார் வேரியண்ட்களை விற்பனை செய்து வருகிறது. அதன்படி,  X1 sDrive18i xLine கார் வேரியண்ட் 45 லட்சத்து 90 ஆயிரத்திற்கும், X1 sDrive18i M sport (டீசல் இன்ஜின்) கார் வேரியண்ட் 50 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. அந்த வரிசையில் தற்போது, பெட்ரோல் இன்ஜின் வேரியண்டில் X1 sDrive18i M ஸ்போர்ட்ஸ் கார் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை 48 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய வேரியண்டிற்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ஜுன் மாதத்தில் இந்த கார்களின் டெலிவெரி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய சந்தையில் X1 சீரிஸ் கார் வேரியண்ட்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.


இன்ஜின் விவரம்:


இந்த புதிய மாடலில் 1.5 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 134 ஹெச்பி பவர், 230 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வெளிப்படுத்துகிறது. இந்த புதிய வேரியண்ட் ஏற்கனவே உள்ள ஆப்ஷன்களுடன் சேர்த்து புதியதாக, Portimao Blue மற்றும் Storm Bay Grey ஆகிய நிறங்களிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிறப்பம்சசங்கள்:


ஷைன் 18i X லைன் மாடலுடன் ஒப்பிடும் போது புதிய X1 sDrive18i M ஸ்போர்ட் மாடலில் ஹை கிளாஸ் பிளாக் ரூஃப் ரெயில்கள், ஆக்டிவ் சீட்கள், ரியர் சீட் அட்ஜஸ்ட், ஹார்மன் கார்டன் மியூசிக் சிஸ்டம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் M ஸ்போர்ட் எக்ஸ்டீரியர் பேக்கேஜ் வழங்கப்படுகிறது. இதில் கிட்னி கிரில்-க்கு பியல் க்ரோம் ஃபினிஷ், ஹை கிளாஸ் பிளாக் ஸ்லாட்கள், புதிய பம்ப்பர்கள், ஃபெண்டர் மற்றும் சாவியில் M பேட்ஜ்கள், M ஆந்த்ரசைட் ஹெட்லைனர், லெதர் ஸ்டீரிங் வீல், பேடில் ஷிஃப்டர்கள் இடம்பெற்று உள்ளன. 10.7 இன்ச்  இன்போடெயின்மெண்ட் ஸ்க்ரீன் ஸ்க்ரீன், வைர்லெஸ்  ஆண்ட்ராய்ட் ஆட்டோ &  ஆப்பிள் கார் பிளே, 10.2 இன்ச்  டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர்,வர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங் என பல்வேறு வசதிகளும் இடம்பெற்றுள்ளன. இது எற்கனவே பயனாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், விற்பனையிலும் அசத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI