9.50 லட்சம் பேர் பாதிப்பு:
குஜராத்தில் பஞ்சாயத்து ஜூனியர் கிளார்க் ஆட்சேர்ப்பு தேர்வு வினாத்தாள் வெளியானதால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இன்று காலை 11 மணி முதல் நடத்தப்படவிருந்த தேர்வில் 9.50 லட்சத்துக்கு மேற்பட்டோர் பதிவு செய்திருந்தனர்.
இசாம் என்பவரிடம் இருந்து வினாத்தாள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த சூழலில் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும் மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் குஜராத் மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.
வினாத் தாள் கசிவு விவகாரம் வெளியானதை தொடந்து, இன்று காலை 11 மணிக்கு நடைபெறவிருந்த பஞ்சாயத்து ஜூனியர் கிளார்க் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை தேர்வு நடைபெற இருந்தது.
குஜராத் பஞ்சாயத்து சர்வீஸ் செலக்ஷன் போர்டு வெளியிட்ட செய்தி குறிப்பில்,’ போலீசாருக்கு கிடைத்த தகவலில் அடிப்படையில், சந்தேகத்திற்குரிய இசாம் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து மேற்கண்ட தேர்வின் வினாத்தாள் நகல் கண்டுபிடிக்கப்பட்டது. இது மிகப்பெரிய குற்றவியல் நடவடிக்கை என்பதால் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்’ என்று தெரிவித்தது.