Best SUV Cars Below 15 Lakhs in India: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 15 லட்ச ரூபாய் பட்ஜெட்டில்,  எஸ்யுவி கார் வாங்க விரும்புவோருக்கான பரிதுரைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


எஸ்யுவி கார்கள்:


இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் SUVகள் டிரெண்டிங்கில் உள்ளன. கார் தயாரிப்பாளர்களும் அதில் கவனம் செலுத்தி பணமாக்குகின்றனர். மாருதி சுசுகி, ஹூண்டாய் மற்றும் கியா போன்ற நிறுவனங்கள் சப்-4 மீட்டர் பிரிவு மற்றும் நடுத்தர அளவு வகைகளின் கீழ் வரும் பல SUVகளை வழங்குகின்றன. இருப்பினும், நீங்கள் ஒரு எஸ்யுவி வாங்க விரும்பும்போது, ​​உங்களுக்கான அம்சங்களுடன் கூடிய சரியான காரை தேர்வ்யு செய்வதில் குழப்பம்டையலாம். எனவே உங்களின் தேர்வை எளிதாக்க, இந்தியாவில் ரூ.15 லட்சத்திற்கும் குறைவான சிறந்த 8 நடுத்தர அளவிலான எஸ்யூவிகள் , அவற்றின் அம்சங்கள் மற்றும் போட்டியாளர்களை விட அவற்றைத் தேர்ந்தெடுப்பதற்கான கட்டாயக் காரணங்கள் ஆகியவை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


Mahindra Thar:


மஹிந்திரா தார் அதன் எளிமையான வடிவமைப்பு மற்றும் எங்கும் செல்லக்கூடிய திறன்கள் காரணமாக வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கிறது. தனது இரண்டாம் தலைமுறையில், தார் ஒரு முழுமையான மேம்படுத்தலை கண்டுள்ளது. 9.99 லட்சத்தில் தொடங்கும் தார் ஒரு மலிவு விலையில் எஸ்யூவி. நீங்கள் திறமையான தார் பதிப்பைத் தேடுகிறீர்களானால், ரூ. 13.59 லட்சம் விலையிலான 4X4 அமைப்புடன் கூடிய AX(O) வேரியண்டை தேர்வு செய்யலாம்.  


Hyundai Creta:


ஹூண்டாய் க்ரெட்டா இந்தியாவில் மிகவும் பிரபலமான நடுத்தர அளவிலான SUV என்பதோடு,  ஹூண்டாயின் சிறந்த விற்பனையாகும் வாகனமாகவும் உள்ளது. க்ரெட்டா அதன் போட்டியாளர்கள் வழங்காத பல அம்சங்களை வழங்கும் அதே வேளையில் நடைமுறை மற்றும் ஆடம்பரத்திற்கு இடையே ஒரு சிறந்த சமநிலையை வழங்குகிறது. இதன் தொடக்க விலை 10.84 லட்சமாக உள்ளது. க்ரெட்டா மாடல் பெட்ரோல் அல்லது டீசல் இன்ஜின் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. அதே நேரத்தில் கியர்பாக்ஸ் விருப்பங்களும் மாறுபடும். க்ரெட்டாவை வாங்குவதற்கான மிக முக்கியமான காரணம் அதன் நடைமுறைத் தன்மையாகும்.


Kia Seltos:


ஹூண்டாய் க்ரேட்டாவின் அதே தளத்தை அடிப்படையாகக் கொண்டாலும், கியா செல்டோஸ் ஒரு ஸ்போர்ட்டியர் வடிவமைப்பைக் கொண்டுள்ளது.  இது இந்திய சந்தையில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. கியா செல்டோஸ் க்ரெட்டாவின் அதே அம்சங்களையும் வசதியையும் வழங்குகிறது, அதே பவர்டிரெய்ன் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுகளையும் பகிர்ந்து கொள்கிறது. ஹூண்டாய் க்ரெட்டாவைப் போலவே கியா செல்டோஸின் விலை ரூ.10.69 லட்சத்தில் தொடங்குகிறது. செல்டோஸின் முக்கிய விற்பனை புள்ளிகளில் ஒன்று அதன் எதிர்கால வடிவமைப்பு ஆகும். நல்ல தோற்றம் முக்கியம் என நீங்கள் கருதினால் செல்டோஸ் உங்களுக்கான நடுத்தர அளவிலான எஸ்யூவி ஆகும்.


Maruti Suzuki Grand Vitara:


மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா என்பது கார் தயாரிப்பாளரின் முதன்மை மாடலாகும். இது வலுவான ஹைப்ரிட் பவர்டிரெய்ன் கொண்ட இந்த பிரிவில் உள்ள இரண்டு SUVகளில் ஒன்றாக இருக்கிறது. ஹைரைடரைத் தவிர ஆல்-வீல் டிரைவ் தொழில்நுட்பத்தை வழங்கும் ஒரே வாகனம் கிராண்ட் விட்டாரா மட்டுமே. மாருதியின் வலுவான சர்வீஸ் நெட்வொர்க் மற்றும் டொயோட்டாவின் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தின் ஆதரவுடன், கிராண்ட் விட்டாரா இந்த பிரிவில் வலுவான போட்டியாளராக உள்ளது. ரூ.10.45 லட்சத்தில் இருந்து கிராண்ட் விட்டாராவின் விலை தொடங்குகிறது.


Toyota Hyryder:


அதே பிளாட்ஃபார்ம் அடிப்படையில் மற்றும் அதே இன்ஜின் விருப்பங்களுடன்,  டொயோட்டா ஹைரைடர் கிராண்ட் விட்டாராவுக்கு நேரடி மாற்றாக உள்ளது. அதேபோன்ற விலையுடன், ஹைரைடர் ஆல்-வீல் டிரைவ் மற்றும் வலுவான ஹைப்ரிட் இன்ஜினையும் கொண்டுள்ளது.


Volkswagen Taigun:


ரூ.11.55 லட்சம் தொடக்க விலையில் Volkswagen Taigun 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அல்லது 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இது நிணயிக்கப்பட்ட விலைக்கான சரியான செயல்திறனை வழங்கும் நடுத்தர அளவிலான SUV ஆகும்.  இந்த காரின் பெரும்பாலான வேரியண்ட்கள் ரூ. 15 லட்சம் விலையில் குறைந்தாலும், கம்ஃபோர்ட்லைன், ஹைலைன் மற்றும் ஹைலைன் ஏடி வகைகளின் விலை ரூ.15 லட்சத்திற்கும் குறைவாகவே உள்ளது.  ஃபோக்ஸ்வேகன் டைகன் நல்ல உருவாக்கத் தரம் மற்றும் ஜெர்மன் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.


Skoda Kushaq:


ஃபோக்ஸ்வேகன் வாகனத்தை உங்களால் வாங்க முடியவில்லை என்றாலும்,  நன்றாக கட்டமைக்கப்பட்ட நடுத்தர அளவு SUVவை வாங்க விரும்பினால் ஸ்கோடா குஷாக் உங்களுக்கான சரியான தேர்வாக இருக்கும்.  குஷாக் மற்றும் டைகன் ஆகியவை சாராம்சத்தில் ஒரே வாகனங்கள் - இன்ஜின், பிளாட்ஃபார்ம் மற்றும் கியர்பாக்ஸ் போன்ற பல அம்சங்களும் ஒரே மாதிரியாக உள்ளன. ஸ்கோடா குஷாக், Taigun ஐ விட சற்றே குறைவான விலையுடன், ஆட்டோமேடிக் வேரியண்ட் உட்பட நான்கு வகைகளை வழங்குகிறது. ஸ்கோடா குஷாக் நல்ல கட்டுமானத் தரத்தையும் கொண்டுள்ளது.


MG Astor:


வடிவமைப்பு, தென் கொரிய மாடல், இந்திய வடிவமைப்பு, ஹைப்ரிட் தொழில்நுட்பம் அல்லது ஜெர்மன் பொறியியல் ஆகிய எதுவுமே உங்கள் விருப்பம் இல்லை என்றால், MG Astor உங்களுக்கான சரியான தேர்வாகும். ரூ.10.51 லட்சத்தில் இதன் விலை தொடங்குகிறது.  ஆஸ்டர் டிரைவரை ஈடுபாட்டுடன் வைத்திருக்க ஒரு தனிப்பட்ட உதவியாளரைக் கொண்டுள்ளது. எம்ஜி ஆஸ்டர் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அல்லது 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. மற்ற நடுத்தர அளவிலான SUVகளை விட MG ஆஸ்டரை தேர்வு செய்வதற்கான ஒரு முக்கிய காரணம், ADAS உட்பட பல தொழில்நுட்பங்கள் மற்றும் அதன் சுத்தமான ஸ்டைலிங் ஆகும்.


 


Car loan Information:

Calculate Car Loan EMI