அதிகப்படியான நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சார்ந்த மக்கள் வசிக்கும் நாடு என்றால் அது இந்தியாதான். இந்தியாவில் கார் வாங்குவதென்பது இன்றுவரை பலரது கனவாகவே உள்ளது. அதே நேரத்தில் இந்தியர்களுக்கு மைலேஜ் அதிகம் கொடுக்கும் கார்கள் என்றால் சிவப்பு கமபளம் போட்டு வரவேற்பார்கள். இப்படியான நிலையில் இந்தியாவில் கார் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் கார் கம்பெனிகள் அதிகம். அதே நேரத்தில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் சொகுசுக் கார்களும் உள்ளது. 

இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் விற்பனையான கார்களில் 77% க்கும் அதிகமான விற்பனையான கார்கள் என்றால் அது மாருதி சுஸுகி கார்கள். மாருதி சுஸுகி வேகன் ஆர் நவம்பர் 2023 இல் 16,567 கார்களை இந்தியா முழுவதும் விற்பனை செய்துள்ளது. இதன்மூலம் சிறந்த கார் விற்பனையாளர் என்ற பெருமையை மாருதி சுஸூகி தக்கவைத்துள்ளது.  முதல் இடத்தில் மாருதியின் வேகன் ஆட் இருந்தால் இரண்டாவது இடத்தில் மாருதியின் டிசையர் உள்ளது. மூன்றாவது இடத்தில் மாருதி கார் இருந்தாலும் அது மாருதி கம்பெனியாலே நம்பமுடியாத அளவிற்கு  மாருதியின் செடான் அதிகம் விற்பனையான கார்களில் 3 வது இடத்தில் உள்ளது.  இதற்கு அடுத்து டாடா தனது தயாரிப்புகளில் சிறந்த விற்பனையாகும் கார்களில் ஒன்றான நெக்ஸான் கார் கிட்டத்தட்ட 15ஆயிரத்துக்கும் அதிகமாக விற்பனை ஆகியுள்ளது. சரியாகச் சொல்லவேண்டும் என்றால், 14 ஆயிரத்து 916 கார்கள் விற்பனை ஆகியுள்ளது.  அதேபோல் டாடாவின் பஞ்ச் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் டாடா பஞ்ச் மொத்தம் 14,383 கார்களை விற்பனை செய்தயப்பட்டுள்ளது.  ஹூண்டாய் எக்ஸ்டெர் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகும் பஞ்ச்சின் விற்பனை சிறப்பாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


நவம்பர் 2023க்கான பிராண்ட் வாரியான கார் விற்பனை புள்ளிவிவரங்கள் வெளியாகிவிட்டன. சிறந்த செயல்திறன் கொண்ட பிராண்டுகள் மற்றும் அவற்றின் நிலைகளின் அடிப்படையில் எதுவும் மாறவில்லை என்றாலும், அக்டோபர் மாதத்திற்குப் பிந்தைய விற்பனையின் விபரங்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை கார் பிராண்ட் மற்றும் கார்கள் என தனித்தனியாக பிரிக்கபபட்டுள்ளது.  இதில் அதிகம் விற்பனையான பிராண்ட்களின் தரவரிசையில் மாருதி சுஸுகி முன்னணியில் உள்ளது. அதைத் தொடர்ந்து முறையே ஹூண்டாய் மற்றும் டாடா அடுத்தடுத்த இடத்தில் உள்ளது. முந்தைய மாதத்தில் விற்பனையாகும் முதல் 10 கார் பிராண்டுகள் ஒவ்வொன்றும் மாதந்தோறும் (MoM) தேவை இழப்பை சந்தித்துள்ளன, அதே நேரத்தில் Kia, Skoda மற்றும் Volkswagen ஆகியவை ஆண்டுக்கு ஆண்டு (YoY) விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றது. நவம்பர் 2023க்கான முதல் 10 சிறந்த விற்பனையான கார் பிராண்டுகளுக்கான பிராண்ட் வாரியான விற்பனை குறித்த அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

 

பிராண்டுகள்

நவம்பர் 2023

அக்டோபர் 2023

MoM வளர்ச்சி (%)

நவம்பர் 2022

ஆண்டு வளர்ச்சி (%)

மாருதி சுசுகி

1,34,158

1,68,047

-20.2%

1,32,395

1.3%

ஹூண்டாய்

49,451

55,128

-10.3%

48,002

3%

டாடா

46,070

48,343

-4.7%

46,040

0.1%

மஹிந்திரா

39,981

43,708

-8.5%

30,233

32.2%

கியா

22,762

24,351

-6.5%

24,025

-5.3%

டொயோட்டா

16,924

20,542

-17.6%

11,765

43.9%

ஹோண்டா

8,730

9,400

-7.1%

7,051

23.8%

எம்.ஜி

4,154

5,108

-18.7%

4,079

1.8%

ஸ்கோடா

3,783

4,566

-17.1%

4,433

-14.7%

வோக்ஸ்வேகன்

3,095

4,089

-24.3%

3,570

-13.3%

 


Car loan Information:

Calculate Car Loan EMI