Best Budget Cars of 2023: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பல்வேறு சிறந்த அம்சங்கள் மூலம், வாடிக்கையாளர்களை கவர்ந்து விற்பனையிலும் அசத்திய மூன்று கார்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்லன.
இந்திய ஆட்டோமொபைல் சந்தை:
சர்வதேச ஆட்டோமொபைல் சந்தையில் உலக மக்கள் தொகையில் முதலிடம் வகிக்கும் இந்தியா, மிகமுக்கிய பங்கு வகிக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனை உணர்த்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான புதுப்புது கார் மாடல்கள் உள்நாட்டு நிறுவனங்களால் மட்டுமின்றி, பல வெளிநாட்டு நிறுவனங்களாலும் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்துகின்றன. பிரீமியம் காம்பாக்ட் எஸ்யூவிகள் அதிக எண்ணிக்கையில் வந்தாலும், பட்ஜெட் பிரிவும் உற்பத்தியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களால் புறக்கணிக்கப்படவில்லை. ஏனென்றால், கார் மாடல்களில் பல பிரிவுகள் இருந்தாலும் பட்ஜெட் கார் என்பது இங்கு மிக முக்கியமானதாகும். காரணம், நடுத்தர மக்கள் அதிகம் வசிக்கும் இந்தியாவில், கார் விற்பனையில் அதிக பங்கு வகிப்பது பட்ஜெட் கார்களாக தான் உள்ளன. அந்த வகையில் நடப்பாண்டில் வெளியாகி பல்வேறு சிறப்பம்சங்கள் மூலம் வாடிக்கையாளர்களை கவர்ந்து, விற்பனையிலும் அசத்திய டாப்-3 கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
Hyundai Exter:
தி எக்ஸ்டர் மிகச்சிறிய ஹூண்டாய் எஸ்யூவி ஆக இருந்தாலும் அதன் பரிமாணங்களுக்குள் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. பாக்ஸி தோற்றத்தை பெற்றாலும் சமீபத்திய ஹூண்டாய் வடிவமைப்பின் அனைத்து அம்சங்களையும் கொண்டு நல்ல இட வசதியை வழங்குகிறது. AMT பதிப்பு சிறப்பம்சமாக உள்ளது. பாதுகாப்பு, அதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் அதன் ஒட்டுமொத்த டிரைவிங் டைனமிக்ஸ் ஆகியவற்றின் அடிப்படையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. எக்ஸ்டர் 1.2லி பெட்ரோலுடன் கிடைக்கிறது. இதன் விலை இந்திய சந்தையில் இதன் விலை 6 லட்ச ரூபாய் தொடங்கி அதிகபட்சமாக 10.5 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Maruti Suzuki Fronx:
Fronx நன்றாக இருக்கிறது அதோடு ஒரு சிறிய SUV ஆகவும் ஸ்கோர் செய்கிறது. இது வழக்கமான மாருதி குணாதிசயங்களை கொண்டிருந்தாலும், அதன் டர்போ பெட்ரோல் இன்ஜின் கவனம் ஈர்க்கிறது. இதன் விலை 1.2l பெட்ரோல் இன்ஜின் விலையை விட சற்று அதிகமாக உள்ளது. டிசைன் என்பது ஃப்ரான்க்ஸின் வடிவமைப்பு மினி கிராண்ட் விட்டாரா போன்ற ஸ்டைலிங் கொண்டிருக்க, அழகான விசாலமான கேபின் கருவியைப் பெறுகிறது. 1.2லி பெட்ரோலுடன் கூடிய AMT வேரியண்ட் முதல் பரிந்துரையாகும். நீங்கள் அதிக செயல்திறனை விரும்பினால் டர்போ பெட்ரோல் இன்ஜின் வாங்கலாம். இதன் விலை ரூ.7.47 லட்சம் தொடங்கி ரூ.13.14 லட்சம் வரை நிர்ணையிக்கப்பட்டுள்ளது.
MG Comet:
சிறிய MG கோமெட் நிச்சயமாக மிகவும் சுவாரசியமான, மிகவும் மலிவு விலை மின்சார காராக மட்டுமின்றி, இந்தியாவில் பெறக்கூடிய மிகச் சிறிய காராக உள்ளது. கோமெட் ஆனது கணிசமான அளவு அம்சங்களைக் கொண்டுள்ளதோடு, அதன் சிறிய அளவிலும் வியக்கத்தக்க வகையில் இடவசிதியை பெற்றுள்ளது. இதனை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், 230 கிமீ வரை ரேஞ்ச் வழங்குகிறது. அதே நேரத்தில் இயங்கும் செலவு வழக்கமான பெட்ரோல் ஹேட்ச்பேக்கை விட மிகவும் மலிவானது. இதன் விலை இந்திய சந்தையில் 7.98 லட்சம் தொடங்கி 9.98 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI