நாள்: 25.12.2023 - திங்கள் கிழமை


நல்ல நேரம்:


காலை 6.15 மணி முதல் காலை 7.15 மணி வரை


மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை


இராகு:


காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை


குளிகை:


பகல் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை


எமகண்டம்:


காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை


சூலம் - கிழக்கு


மேஷம்


உறவினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். உடனிருப்பவர்களின் தன்மைகளை புரிந்து கொள்வீர்கள். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சிந்தித்துச் செயல்பட்டால் நெருக்கடியான சில சூழல்களை தவிர்க்கலாம். உயர்வு நிறைந்த நாள்.


ரிஷபம்


புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மாறுபட்ட சிந்தனைகளின் மூலம் திட்டமிட்ட பணிகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். ஆடம்பரமான சிந்தனைகளை தவிர்க்கவும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மேம்படும். சுபகாரிய முயற்சிகளில் விவேகத்துடன் செயல்படவும். பக்தி நிறைந்த நாள்.


மிதுனம்


வாக்குறுதி அளிக்கும்பொழுது சிந்தித்துச் செயல்படவும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். நண்பர்களின் வழியில் அலைச்சல்களும், சில வருத்தங்களும் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். தனம் நிறைந்த நாள்.


கடகம்


சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை  நீங்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.


சிம்மம்


பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். வாகனம் தொடர்பான பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். பணியில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரப் பணிகளில் சில நுட்பங்களை புரிந்துகொள்வீர்கள். சோர்வு விலகும் நாள்.


கன்னி


மூத்த உடன்பிறப்புகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். நீண்ட கால நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பால் முன்னேற்றம் ஏற்படும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். சிரமம் விலகும் நாள்.


துலாம்


பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். வியாபாரப் பணிகளில் பொறுமையை கையாளவும். எதிர்பார்த்த சில விஷயங்கள் நிறைவேறுவதில் காலதாமதம் உண்டாகும்.  அதிகார பதவியில் இருப்பவர்கள் சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். வாழ்க்கைத் துணைவரிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். அமைதி வேண்டிய நாள்.


விருச்சிகம்:


உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய வேலை நிமிர்த்தமான எண்ணங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வர்த்தகப் பணிகளில் விவேகம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், புரிதலும் அதிகரிக்கும். அன்பு நிறைந்த நாள்.


தனுசு


இழுபறியான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தால் புதுவிதமான அனுபவம்  ஏற்படும். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். பணி நிமிர்த்தமான செயல்களில் விவேகம் வேண்டும். வியாபாரத்தில் முதலீடுகள் உயரும். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். முயற்சி மேம்படும் நாள்.


மகரம்


புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வாகனம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய தெளிவை ஏற்படுத்தும். சுபகாரியம் தொடர்பான பேச்சுக்களில் சாதகமான சூழ்நிலைகளை உண்டாகும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். மேன்மை நிறைந்த நாள்.


கும்பம்


எதிர்பாராத சில உதவிகளின் மூலம் முன்னேற்றமான சூழ்நிலைகள்   ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். உத்தியோகம் நிமிர்த்தமான பயணங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களின் ஆதரவு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். பொறுமை வேண்டிய நாள்.


மீனம்


புதுவிதமான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். நீண்டநாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். வியாபாரப் பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகப் பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். உறவினர்களைப் பற்றிய புரிதல் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.