Best Mileage Petrol Cars Under 10 Lakhs: இந்திய ஆட்டோமொபைல்  அதிக மைலேஜ் வழங்கும் பெட்ரோல் கார்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. 


அதிக மைலேஜ் வழங்கும் பெட்ரோல் கார்கள்:


கார் என்பது பணக்காரர்களுக்கானது என்பதை தாண்டி, தற்போது நடுத்தர வர்கத்தினர் இடையேயான பயன்பாடும் அதிகரித்துள்ளது. அதேநேரம், பெரும்பாலானாவர்களின் கார் தேர்வு என்பது விலை மற்றும் மைலேஜ் ஆகிய முக்கிய அம்சங்களின் அடிப்படையில் தான் அமைகிறது. இந்நிலையில், 10 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் அதிக மைலேஜ் வழங்கும் பெட்ரோல் கார்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. 


Maruti Suzuki Fronx


மாருதி ஃப்ரான்க்ஸ்  மாடலானது 1.2-லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஆனது,  மேனுவல் கியர்பாக்ஸுடன் லிட்டருக்கு 21.79 கிலோ மீட்டர் தூரமும், ஆட்டோமேடிக் கியர்பாக்ஸுடன் லிட்டருக்கு 22.89 கிலோ மீட்டரும் மைலேஜ் வழங்குகிறது.  Fronx  மாடலானது 1.0-லிட்டர், மூன்று சிலிண்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் கொண்ட வேரியண்டிலும் கிடைக்கிறது. இது மேனுவலில் லிட்டருக்கு 21.50 கிலோ மீட்டர் தூரமும். ஆட்டோமேடிக்கில் லிட்டருக்கு 20.75 கிலோ மீட்டர் தூரமும் மைலேஜ் வழங்குகிறது. இந்த மாடலின் தொடக்க விலை ரூ.7.47 லட்சம்.


Maruti Suzuki Baleno/Toyota Glanza


Maruti Baleno மற்றும் Toyota Glanza ஆகிய இரண்டும் மாடல்களும் ஒரே மாதிரியான 1.2-லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின்களை மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன்களுடன் கொண்டுள்ளது. இதில் மேனுவ எடிஷன் லிட்டருக்கு 22.35 கிலோ மீட்டர் தூரமும், ஆட்டோமேடிக் எடிஷன்கள் லிட்டருக்கு 22.94 கிலோ மீட்டரும் மைலேஜ் வழங்குகிறது. பலீனோ மாடாலின் தொடக்க விலை ரூ.6.61 லட்சமாகவும், கிளான்சா மாடலின் தொடக்க விலை ரூ.6.81 லட்சமாகவும் உள்ளது.


Maruti Suzuki Swift


ஸ்விஃப்ட்  மாடலும் 1.2 லிட்டர், நான்கு சிலிண்டர் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது சராசரியாக  ஒரு லிட்டருகு 23.48 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது. மேனுவல் எடிஷன் 23.26 கிலோ மீட்டரும், ஆட்டோமேடிக் எடிஷன் 24.12 கிலோ மீட்டரும் மைலேஜ் வழங்குகிறது. இதன் தொடக்க விலை ரூ.5.99 லட்சமாகும்.


Maruti Suzuki Dzire


Dzire மாடல் சந்தையில் கிடைக்க்கூடிய மிகவும் எரிபொருள் திறன் வாய்ந்த சிறிய செடான் மாடல் ஆகும் ஸ்விஃப்ட்டின் அதே 1.2-லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் தான் இந்த மாடலும் இயக்கப்படுகிறது. டிசைரின் மேனுவல் எடிஷன் 23.26 கிலோ மீட்டரும்,  ஆட்டோமேடிக் எடிஷன் 22.19 கிலோ மீட்டரும் மைலேஜ் வழங்குகிறது. இதன் தொடக்க விலை ரூ.6.51 லட்சம்.


Maruti Suzuki Alto K10


ஆல்டோ கே10 தற்போது நாட்டில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் கார்களில் ஒன்று என்பதோடு, எரிபொருள் திறன் வாய்ந்த கார்களில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. 1.0-லிட்டர், மூன்று சிலிண்டர் இன்ஜின், மேனுவல் எடிஷனுக்கு 24.39 கிலோ மீட்டரும், ஆட்டோமேடிக் எடிஷனுக்கு 24.9 கிலோ மீட்டரும் மைலேஜைக் கொண்டுள்ளது. இதன் தொடக்க விலை சுமார் ரூ.4 லட்சம்.


Maruti Suzuki Wagon R 1.0


மாருதி சுஸுகியின் உயரமான மாடலான வேகன்-ஆர் ஹேட்ச்பேக், இரண்டு பெட்ரோல் இன்ஜின் விருப்பங்களைப் கொண்டுள்ளது. 1.0-லிட்டர், மூன்று சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் மேனுவல் எடிஷனுக்கு 24.35 கிலோ மீட்டரும்,  ஆட்டோமேடிக் எடிஷனுக்கு 25.19 கிலோ மீட்டரும் மைலேஜ் வழங்குகிறது. அதேநேரம் 1.2-லிட்டர், நான்கு-சிலிண்டர் இன்ஜின் ஆனது சராசரியாக 23.9 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது. இதன் தொடக்க விலை ரூ.5.5 லட்சம் ஆகும்.


Car loan Information:

Calculate Car Loan EMI