NIA Raid: தடை செய்யப்பட்ட  அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில், என்.ஐ. ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Continues below advertisement

சென்னையில் NIA சோதனை:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் NIA அதிகாரிகள் சோதனயில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, பள்ளிக்ககரனை, படப்பை உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடைபெற்று வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்துள்ள கருநீலம் பகுதியில் உள்ள தனியார் அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியிலும் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். சோதனைக்குப் பிறகு முழுமையான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில், இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

சோதனை எதற்கு?

வடமாநில தொழிலாளர்கள் போர்வையில் இந்தியாவுக்குள் ஊடுருவும் வங்கதேசத்தினர் ஊடுருவுவதாக கூறப்படுகிறது.  இதுதொடர்பாக என்.ஐ.ஏ வழக்கு பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று சோதனை  மேற்கொண்டுள்ளனர். சென்னை அடுத்த படப்பையில் ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோன்று செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்துள்ள கருநீலம் பகுதியிலும் திரிபுரா மாநில ஆதார் கார்டு அட்ரஸ் கொடுத்து தங்கி வேலை பார்த்து வரும் வங்கதேசத்தைச் சேர்ந்த மற்றொரு  நபருடன்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Continues below advertisement

3 பேர் கைது:

இதையடுத்து, போலி ஆதார் அட்டை கொடுத்து தமிழ்நாட்டில் தங்கியிருந்த  வங்கதேசத்தைச் சேர்ந்த 3 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். படப்பை பகுதியில்  போலி ஆதார் அட்டை கொடுத்து பணியில் சேர்ந்த சாகித் உசேன் கைது செய்யப்பட்டார். மறைமலைநகரில் கோவிந்தாபுரத்தில் தேநீர் கடையில் வேலைபார்த்து வந்த  திரிபுராவைச் சேர்ந்த முன்னா மற்றும் அவருடன் இருந்த நபர் கைது செய்யப்பட்டார்.