சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம் சூரியனில் இருந்து வெளிவரும் எக்ஸ் கதிர்களை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. 






சூரியனை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) சார்பில் ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம் சூரியனின் மேல் வளிமண்டலம் மற்றும் வெளிப்புற அடுக்குகளை ஆராய்ச்சி செய்ய உள்ளது. பூமியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கும், சூரியனுக்கும் இடையே உள்ள லாக்ரேஞ்ச் புள்ளி 1-இல் சூரியனை நோக்கி இந்த விண்கலம் நிலைநிறுத்தப்படும்.


அதன்பிறகு, அதில் உள்ள 7 கருவிகள் சூரியன் குறித்த ஆய்வை மேற்கொள்ள உள்ளன.  இதற்கிடையில், ஆதித்யா எல்-1 விண்கலத்தின் சுற்றுவட்டபாதைகள் படிப்படியாக உயரத்தப்பட்டன. செப்டம்பர் 30 ஆம் தேதி பூமியில் இருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் 9.2 லட்சம் கிலோ மீட்டர் தொலைவை வெற்றிகரமாக கடந்தது. 


இதற்கிடையில், கடந்த 30ஆம் தேதி பூமியில் இருந்து அதித்யா எல்-1 விண்கலம் 9.2 லட்சம் கிலோ மீட்டர் தொலைவை வெற்றிகரமாக கடந்தது.  இதனால், பூமியின் ஈர்ப்பு  விசை உள்ள பகுதியை விட்டு வெளியேறிய ஆதித்யா எல்-1 விண்கலம் சூரியன் குறித்த ஆய்வுக்காக லாக்ரோஞ்ச் எல்-1 புள்ளியை நோக்கி பயணிக்க தொடங்கியது.


இப்படி சூரியனை நோக்கிய தனது பயணத்தில் ஆதித்யா எல் 1 விண்கலம் ஆரோக்கியமாக இருப்பதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


 Trajectory Correction Maneuvre (TCM) எனும் விண்கலத்தின் பாதை மாற்று பணி அக்டோபர் 6ஆம் தேதி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. இது வெற்றிகரமாக 16 விநாடிகளில் நிகழத்தப்பட்டுள்ளது. கடந்த 19ஆம் தேதி லாக்ரேஞ்சன் புள்ளி 1ல் இன்செர்ஷன் நிகழ்த்தப்பட்டது. இதனால், விண்கலத்தின் பாதையை சரிசெய்ய இந்த செயல்பாடு தேவையானதாக இருந்தது. இந்த கருவி சூரியனில் இருந்து வெளிவரும் துகள்களின் காந்த தன்மை குறித்த ஆய்வை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று ஆதித்யா எல் 1 விண்கலம் பற்றிய கூடுதல் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது. அதாவது சூரிய அனலில் இருந்து வெளியாகும் எக்ஸ் கதிர்களை முதல் முறையாக படமெடுத்து அனுப்பியுள்ளது. இதனை அக்டோபர் 29-ஆம் தேதி விண்கலம் புகைப்படம் எடுத்துள்ளது.


ஆதித்யா எல் 1  விண்கலத்தில் உள்ள எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் கருவி உயர் ஆற்றல் கொண்ட சூரிய கதிர்களை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. மேலும், ஆதித்யா எல் 1 விண்கலத்தில் இருக்கும் எச்.ஈ.எல் 10எஸ் கருவி நன்றாக செயல்பட்டு வருவதாகவும் இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகள் சூரிய ஆற்றல் மற்றும் எலக்ட்ரான் குறித்த ஆய்வு செய்ய உதவும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளார்.


Diwali 2023: 5 நாட்கள் கொண்டாடப்படும் தீபாவளி! ஒவ்வொரு நாளும் என்ன விசேஷம்?