Maruti Escudo SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் க்ரேட்டா தொடர்ந்து ஆதிக்கப்ம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

க்ரேட்டாவின் போட்டியாளர் - மாருதி எஸ்குடோ எஸ்யுவி:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவு என்பது மிகவும் போட்டித்தன்மை வாய்ந்ததாக உள்ளது. ஆனாலும், கடந்த சில ஆண்டுகளாகவே ஹுண்டாயின் க்ரேட்டா தான் இந்த பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் தான், இதற்கு போட்டியாக இன்ஜின் அடிப்படையிலான புதிய 5 சீட்டர் எஸ்யுவியை நடப்பாண்டில் மாருதி நிறுவனம் சந்தைப்படுத்த உள்ளதாக ஏற்கனவே செய்தி வெளியிட்டு இருந்தோம். அதன்படி, நாட்டின் மிகப்பெரிய பயணிகள் வாகன உற்பத்தியாளரான மாருதி, தனது முற்றிலும் புதிய காரை வரும் செப்டம்பர் 3ம் தேதி அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இதனை ”எஸ்குடோ” என்ற பெயரில் சந்தைப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாம். இது உள்நாட்டு சந்தையில் க்ரேட்டா உள்ளிட்ட மிட்-சைஸ் எஸ்யுவிக்களுடன் போட்டியிட உள்ளது.

இதையும் படியுங்கள்: Maruti 7 Seater MPV: ரூ.7 லட்சத்துக்கே புதிய 7 சீட்டரை கொண்டு வரும் மாருதி - எப்போது அறிமுகம்? ஹைப்ரிட் ஆப்ஷனுமா?

Continues below advertisement

மாருதி எஸ்குடோ - விலை நிலவரம்:

மாருதியின் எஸ்யுவி லைன் - அப்களில் கிராண்ட் விட்டாராவிற்கு கீழே புதிய கார் மாடல் நிலைநிறுத்தப்பட உள்ளது. அதேநேரம், அதை காட்டிலும் எஸ்குடோ சற்றே கூடுதல் நீளமாக இருக்க வாய்ப்புள்ளதும் சோதனை புகைப்படங்கள் அடிப்படையில் தெரிய வருகிறது.  மேலும், கிராண்ட் விட்டாரா நெக்ஸா தளங்களில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், அதிகப்படியான வாடிக்கையாளர்களிடையே கொண்டு சேர்க்கும் விதமாக புதிய எஸ்யுவி ஆனது அரேனா தளங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. அதற்கேற்றபடி, இதன் விலையும் 10 முதல் 15 லட்ச ரூபாய் வரையில் நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் போட்டியாளரான க்ரேட்டாவின் விலை ரூ.11.10 லட்சம் தொடங்கி ரூ.20.50 லட்சம் வரை நீள்கிறது. இதை காட்டிலும் கணிசமான விலையில் கிடைப்பதால், மாருதியின் எஸ்குடோ மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி எஸ்குடோ - இன்ஜின் விவரங்கள்:

கிராண்ட் விட்டாராவில் உள்ள 1.5 லிட்டர் மிதமான ஹைப்ரிட்  மற்றும் வலுவான ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின்களை எஸ்குடோ அப்படியே கடன் வாங்கி பயன்படுத்தும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மைல்ட் ஹைப்ரிட் அம்சங்களை கொண்டு அதிக வேரியண்ட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என கூறப்படுகிறது. அது எந்த அளவிற்கு சாத்தியம் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இதுலிட்டருக்கு 27 கிலோ மீட்டர் மைலேஜ் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி எஸ்குடோ - வடிவமைப்பு விவரங்கள்

தோற்ற அடிப்படையில், முக்கிய ஸ்டைலிங் அம்சங்களை புதிய காரானது அப்படியே கிராண்ட் விட்டாராவிடமிருந்து கடன் வாங்கியதாகவே காட்சியளிக்கிறது. அதேநேரம், விரைவில் சந்தைப்படுத்தப்பட உள்ள, இ - விட்டாராவையும் நினைவுபடுத்துகிறது. சோதனை ஓட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களின் அடிப்படையில், ஆங்குலர் LED ஹெட்லேம்ப்களால் வடிவமைக்கப்பட்ட மிகவும் நிமிர்ந்த கிரில் மற்றும் கிராண்ட் விட்டாராவுடன் ஒப்பிடும்போது LED ஃபாக் விளக்குகளை ஒருங்கிணைக்கும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர் ஆகியவற்றை பெற்றுள்ளது.  அகலமான ஏர் டேம், திருத்தப்பட்ட பேனட் உள்ளிட்ட புதிய அம்சங்கள் காருக்கு சற்றே கரடுமுரடான தோற்றத்தை அளிக்கிறது.அதோடு, கனெக்டர் எல்இடி லைட் பார், புதிய Y பேட்டர்ன் விளக்குகள், புதிய டெயில் லேம்ப் கிராபிக்ஸ் ட்வீக்ட் ட்ரங்க் லிட் உள்ளிட்டவற்றிலும் மாற்றங்கள் தொடர்கிறது. புதிய வண்ண விருப்பங்களும் இந்த காருக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி எஸ்குடோ - தொழில்நுட்ப அம்சங்கள்

எஸ்குடோ கார் மாடலின் உட்புறமானது பெரும்பாலும் கிராண்ட் விட்டாரா மற்றும் இ -விட்டாராவின் அம்சங்களை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. அதன்படி, வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்ட் ஆட்டோ கனெக்டிவிட்டி உடன் கூடிய 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், சன்ரூஃப், கிளைமேட் கண்ட்ரோல் ஆகிய அம்ங்களும் இடம்பெறக்கூடும்.

மாருதி எஸ்குடோ - பாதுகாப்பு அம்சங்கள்

க்ரேட்டாவிற்கு இணையாக பாதுகாப்பு அம்சங்களிலும் புதிய எஸ்குடோ அசத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, ஆறு ஏர்-பேக்குகள், EBD உடன் கூடிய ABS, எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், ஆல் வீல் டிஸ்க் பிரேக்குகள் ஆகியவற்றை கொண்டு, பாதுகாப்பு பரிசோதைனையில் 5 ஸ்டார்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI