Bajaj Pulsar 2024: பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் புதிய பல்சர் NS200 மற்றும் NS160 மாடல்கள், புதியதாக என்ன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
பஜாஜ் பல்சர் 2024 மாடல்:
இந்திய இரு சக்கர வாகன சந்தையில் மிக முக்கிய நிறுவனமான பஜாஜ் ஆட்டோ, அதன் பிரபலமான பல்சர் மாடலின் புதிய NS200 மற்றும் NS160 எடிஷன் மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய மாடல்களுக்கான விலை விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், புதுப்பிக்கப்பட்ட உபகரணங்களைக் கருத்தில் கொண்டு, தற்போதைய மாடல்களுடன் ஒப்பிடும்போது நிறுவனம் சிறிது விலை அதிகரிப்பை எதிர்பார்க்கிறது. வெளியீடு தொடர்பான அற்விப்பு எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.
புதிய பல்சர் என்எஸ் வடிவமைப்பு விவரங்கள்:
2024 பல்சர் என்எஸ் தொடரின் குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்களில் ஒன்று, எல்இடி டேடைம் ரன்னிங் லேம்ப்களுடன் எல்இடி முகப்பு விளக்குகளின் அறிமுகம் ஆகும். இதன்மூலம் வாடிக்கையாளர்களின் நீண்டகால கோரிக்கையை பஜாஜ் நிறுவனம் பூர்த்தி செய்துள்ளது. முந்தைய ஜாலோஜன் ஹெட்லேம்ப், நவீன அம்சங்களின் அடிப்படையில் மோட்டார்சைக்கிள்களை தங்கள் போட்டியாளர்கள் மத்தியில் பின்னுக்குத் தள்ளி இருந்தது குறிப்பிடத்தக்கது. பல்சர் N160 மற்றும் N150 மாடல்களில் அறிமுகமான ஒரு புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரின் அறிமுகம், புதிய மாடலுக்கான மற்றொரு குறிப்பிடத்தக்க மேம்பாடு ஆகும்
இதர அம்சங்கள்:
புதுப்பிக்கப்பட்ட க்ளஸ்டர் ஒரு பிளாக்-அவுட் டிஸ்ப்ளேவை வழங்குகிறது. அதனை இடது சுவிட்ச் கியரில் உள்ள பட்டன் மூலம் வசதியாகக் கட்டுப்படுத்தலாம். இது கியர் பொசிஷன் இண்டிகேட்டர், மொபைல் நோட்டிபிகேஷன் அலெர்ட்ஸ், உடனடி எரிபொருள் சிக்கனம், காலியாக உள்ள தூரம், நேரம், அத்துடன் நிலையான பயண மீட்டர், ஓடோமீட்டர், ஸ்பீடோமீட்டர் மற்றும் எரிபொருள் அளவீடு உள்ளிட்ட பல தகவல்களை வழங்குகிறது. இருப்பினும், அனலாக் டேகோமீட்டர் ஒரு புதிய ஹாரிஜாண்டல் டிஜிட்டல் மீட்டர் மூலம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பஜாஜ் ரைடு கனெக்ட் பயன்பாட்டின் ஒருங்கிணைப்பு மூலம், பயணிக்கும்போதே பயனாளர்கள் செல்போன் அழைப்புகளை கையாள முடியும். கூடுதலாக, மொபைல் சாதனங்களை சார்ஜ் செய்ய புதிய USB போர்ட் இணைக்கப்பட்டுள்ளது.
இன்ஜின் விவரங்கள்:
குறிப்பிட்ட அம்ச மேம்படுத்தல்கள் இருந்தபோதிலும், பஜாஜ் ஆட்டோ மோட்டார்சைக்கிள்களின் மெக்கானிக்கல் விவரக்குறிப்புகளைத் தக்கவைத்துக்கொள்ளத் தேர்வு செய்துள்ளது. அதன்படி, NS160 ஆனது 17.03bhp மற்றும் 14.6Nm ஆற்றலை வழங்கும் 160.03cc, ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. மறுபுறம், NS200, 199.5cc, லிக்விட்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் எஞ்சின் 24.13bhp மற்றும் 18.74Nm ஐ உருவாக்குகிறது. இரண்டு என்ஜின்களும் E20 இணக்கமாக இருக்கும். அதோடு, மஸ்குலர் பெட்ரோல் டேங்க் மற்றும் ஸ்ப்லிட் சீட் போன்ற அடிப்படை வடிவமைப்பு கூறுகள் முந்தைய மாடல்களில் இருந்து போன்று மாறாமல் உள்ளன.
Car loan Information:
Calculate Car Loan EMI