Shaktimaan: அட... சக்திமானாக ரன்வீர் சிங்! கைகோர்க்கும் மின்னல் முரளி இயக்குநர்? வேற லெவல் தகவல்!

மின்னல் முரளி படத்தை இயக்கிய பாசில் ஜோசப் சக்திமானை படமாக இயக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

சக்திமான்

1997ஆம் ஆண்டு தூர்தர்ஷனில் ஒளிப்பரப்பாகி குழந்தைகளிடம் பிரபலமானத் தொடர் சக்திமான். கிட்டதட்ட 8 ஆண்டுகள் ஒளிபரப்பான இந்தத் தொடருக்கு அன்றையக் கால குழந்தைகள் தீவிர ரசிகர்களாக இருந்தார்கள். முகேஷ் கன்னா இந்தத் தொடரில் நடித்து தயாரித்தும் இருந்தார். தின்கர் ஜெயின் இந்தத் தொடரை இயக்கினார். சமீபத்தில் முகேஷ் கன்னாவை சக்திமானை வைத்து படம் உருவாக இருப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில் தற்போது மற்றுமொரு சுவாரஸ்யத் தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

மின்னல் முரளி இயக்குநர்

மலையாளத்தில் வெளியாகி உலகளவில் வரவேற்பைப் பெற்ற படம்  மின்னல் முரளி. டொவினோ தாமஸ், குரு சோமசுந்தரம் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.  இந்தப் படத்தின் இயக்குநர் மற்றும்  நடிகர் பாசில் ஜோசப் சக்திமான் படத்தை இயக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சூப்பர் ஹீரோ படங்கள் என்றாலே பெரும்பாலும் ஹாலிவுட் படங்களில் சாயலில் இந்தியப் படங்கள் எடுக்கப் பட்டு வந்த நிலையில் முழுக்க முழுக்க ஒரு உள்ளூர் சூப்பர் ஹீரோவை உருவாக்கி காட்டினார் பாசில் ஜோசப். மலையாளத்தில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் இப்படத்திற்கு அங்கீகாரம் கிடைத்தது. மேலும் இப்படத்தின இரண்டாம் பாகமும் கூடிய விரைவில் உருவாக இருக்கிறது.

இதனிடையில் பாசில் ஜோசப் சக்திமான் படத்தை இயக்க இருக்கிறார் என்கிற தகவல் ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது. மேலும் இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் சக்திமானாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 300 கோடி ரூபாய் செலவில் இப்படம் உருவாக இருப்பதாக முகேஷ் கன்னா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ரன்வீர் சிங், ஆபாசப்பட நடிகர் ஜானி சின்ஸ் இணைந்து ஆண்களுக்கு உதவும் வகையிலான பாலியல் ஆரோக்கியம் பற்றிய விளம்பரத்தில் நடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சீரியல் பாணியில் எடுக்கப்பட்டுள்ள இந்த விளம்பரத்தில் கணவருடன் சரியான உறவு இல்லாத மனைவி வீட்டை விட்டு வெளியேறுகிறார். அந்த மனைவியின் கணவராக ஆபாசப்பட நடிகர் ஜானி சின்ஸ் நடித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்களை சிரிக்க வைத்தும், விமர்சனங்களைப் பெற்றும் வருகிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola