இந்தியாவில், ஆடி நிறுவனத்தின் Q வகை வாகனங்கள் மிகவும் பிரபலமான வாகன வகைகளில் ஒன்றாகும். ஆடி நிறுவனத்தில் அதிகமாக விற்பனையானது இந்த எஸ்யூவி வகை கார்களே. சில காலம், ஆடியின் வழக்கமான எஸ்யூவி வகை கார்களை தயாரிப்பதில் இருந்து இடைவெளி எடுத்து கொண்டது. இப்போது மீண்டும், Q வகையைச் சேர்ந்த Q5 அறிமுகமாகி உள்ளது. ஆனால், ஏற்கனவே எஸ்யூவி வகை கார்களுக்கு சந்தையில் போட்டி நிலவுவதால், Q5 கார் விற்பனை செய்வthu ஆடி நிறுவனத்திற்கு சவாலாக அமையும். 


தோற்றம் எப்படி?


எஸ்யூவி வகை கார்களுக்கே உரிதான ஸ்டைலில் இந்த ஆடி Q5 காரும் டிசைன் செய்யப்பட்டுள்ளது. முந்தைய Q5 வகை கார்களுடன் ஒப்பிடும்போது, பெரிதாக தோற்றம் அளிக்கிறது. பம்பரின் கீழ் தளமும் புதுவகை டிசைனால் வடிவமைக்கப்பட்டுள்ளது. வழக்கமான ஆடி எஸ்யூவி கார்களில் இருந்து மாறுப்பட்டு கூடுதல் ஸ்டைலாக, ஸ்போர்ட்ஸ் லுக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.



உட்புற டிசைன் எப்படி?


தரமும், தொழில்நுட்ப வசதிகளும் ஒரு சேர வடிவகைப்பட்டதுதான் ஆடி கார் வகைகள். உயர்தர ப்ளாஸ்டிக் பயன்படுத்தி, உட்புற டிசைன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 10.1 டச் ஸ்க்ரீன், கேபின் என தேவையான அளவு இட வசதியோடு அமைக்கப்பட்டுள்ளது. முன்பக்க இருக்கைகளில் தேவையான அளவு இடம் இருக்கிறது. நான்கு பேர் அமரக்கூடிய வகையில் இந்த மாடல் டிசைன் செய்யப்பட்டுள்ளது.


தேவையான வசதிகள் என்னென்ன?


3 லேயர் ஏர் கண்டிஷனிங், டிஜிட்டல் காக்பிட், டச் ஸ்கிரீன், வயர்லெஸ் சார்ஜிங், பெரிய பனோரமிக் சன்ரூஃப், பவர் அட்ஜெஸ்ட் முன் இருக்கைகளுடன் டிரைவர் இடம். இத்துடன் லெதர், பார்க் அசிஸ்ட், 19 ஸ்பீக்கர் B&O ஆடியோ சிஸ்டம் மற்றும் 8 ஏர்பேக்குகள் மற்றும் பின்புற கேமரா போன்ற அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.


செயல்திறன் எப்படி?


டீசல் அற்ற, 2.0 லிட்டர் பெட்ரோல் வகை மாடல்.  TFSI மோட்டார் 249hp மற்றும் 370Nm செயல்திறன் கொண்டது. 7 ஸ்பீடு ட்ரோனிக் டூயல் கேட்ச் ஆட்டோ கொண்ட குவாட்ரோ இடம் பெற்றுள்ளது. 5 ட்ரைவ் மோட்களில் வாகனத்தை இயக்கலாம். இதில் அதிவேகமாக 237 km/h வேகத்தில் இயக்கலாம்.



எப்படி இருக்கிறது ஆடி Q5?


சலுகையில் இரண்டு ட்ரிம்கள் இருக்கும்- பிரீமியம் பிளஸ் மற்றும் டெக்னாலஜி விலை நிர்ணயம் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய Q5 வண்டிகளின் அம்சங்கள் இந்த மாடலிலும் இருக்கிறது. மேலும், அதிக செயல்திறன், ஸ்டைலான தோற்றம் மற்றும் இன்னும் புதிய வசதிகளை கொண்டுள்ளது.  ஆடியின் எஸ்யூவி வண்டிகளில் முழுமையான ஒரு எஸ்யூவி மாடலாக இது குறிப்பிடப்படலாம்.


ப்ளஸ்: தோற்றம், சிறப்பு வசதிகள், செயல்திறன், பயண அனுபவம்
மைனஸ்:  பின் இருக்கையில் இரண்டு பயணிகளுக்கு மட்டுமே இடம் இருக்கிறது


Car loan Information:

Calculate Car Loan EMI