இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் சூழலில் வாகன ஓட்டிகள் மின்சார வாகனங்களை வாங்கி வருகின்றனர். ஓலா, ஏதர் போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக Ampere நிறுவனமும் செயல்பட்டு வருகிறது. 

Continues below advertisement

Ampere Nexus:

இவர்களின் Ampere Nexus இ ஸ்கூட்டர்களின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம். 

இந்த Ampere இ ஸ்கூட்டரில் மொத்தம் 2 வேரியண்ட் உள்ளது.

Continues below advertisement

1. Nexus EX  - ரூபாய் 1 லட்சத்து 29 ஆயிரத்து 441

2. Nexus ST - ரூபாய் 1 லட்சத்து 39 ஆயிரத்து 642

136 கி.மீட்டர் மைலேஜ்:

இந்த Ampere Nexus இ ஸ்கூட்டர் ஒரு முறை சார்ஜ் செய்தால் 136 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கும். அதிகபட்சமாக இதில் 93 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். இரண்டாவது வேரியண்டில் ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி உள்ளது.

நீலம், அடர் நீலம், சிவப்பு, பச்சை உள்ளிட்ட 6 வண்ணங்களில் இந்த Ampere Nexus இ ஸ்கூட்டர் உள்ளது. இந்த இ ஸ்கூட்டரில் 3 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதில் 3.3 கிலோவாட் ஆற்றல் அதிகபட்சமாக பயன்படுத்தப்படுகிறது. எகோ, சிட்டி மற்றும் பவர் மோட்களில் உள்ளது. 

சிறப்புகள்:

இதில் உள்ள பேட்டரி போர்டபிள் பேட்டரி உள்ளது. ஃபாஸ்ட் சார்ஜிங் அவெய்லபிளிட்டி வசதி உள்ளது. எல்எஃப்டி பேட்டரி வசதி உள்ளது. முன்பக்கம் டிஸ்க் ப்ரேக்கமும், பின்பக்கமும் ட்ரம் ப்ரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

முன்பக்கமும், பின்பக்கமும் 12 இன்ச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸ் சஸ்பென்சன் முன்பக்கமும், ட்வின் ரியர் ஷாக் அப்சார்பர்ஸ் சஸ்பென்சன் பின்பக்கமும் உள்ளது. 765 மி.மீட்டர் இருக்கை உயரம் உள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 170 மி.மீட்டர் உள்ளது. 200 கிலோ எடை தாங்கும் திறன் கொண்டது.

5 வருட வாரண்டி:

5 வருட பேட்டரி வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. 7 இன்ச் டிஎஃப்டி டச் ஸ்கிரின் டிஸ்ப்ளே வசதி கொண்டது. ப்ளூடூத் மற்றும் இன்டர்நெட் வசதி கொண்டது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் டிஜிட்டலில் உள்ளது. ட்ரிப்மீட்டர் டிஜிட்டலில் உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம், லோ பேட்டரி இண்டிகேட்டர், ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர், ஹை பீம் இண்டிகேட்டர் வசதி உள்ளது. நேரம் பார்க்கும் வசதி உள்ளது.

யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. ரிவர்ஸ் மோட், ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் வசதி கொண்டது. பேட்டரி ஸ்டேட்டஸ் வசதி கொண்டது. எல்இடி முகப்பு விளக்குகள் வசதி கொண்டது. பகலில் எரியும் விளக்குகள் கொண்டது. ஹசார்ட் வார்னிங் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. 

நகர்ப்புறங்களில் நெருக்கடியான போக்குவரத்து நெரிசலிலும், குறுகலான இடங்களிலும் ஓட்டுவதற்கு ஏற்ற வாகனம் ஆகும். மேலும், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் உகந்தது ஆகும்.  


Car loan Information:

Calculate Car Loan EMI