தனது முதல் மிட் சைஸ் எஸ்யூவி வாகனமானஅர்பன் க்ரூசர் ஹைரைடர் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது டொயோட்டா நிறுவனம்.


இந்திய மக்கள் மத்தியில் தற்போது நடுத்தர வகையிலான எஸ்யூவி கார்கள் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. மாருதி, ஹூண்டாய், டாடா, கியா போன்ற நிறுவனங்கள் மிட் ரேஞ்சிலான எஸ்யூவி கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக விற்பனை செய்துவருகின்றன. ஆனால், டொயோட்டா மட்டும் மிட் ரேஞ் எஸ்யூவி தயாரிப்பிற்குள் செல்லாமலேயே இருந்த நிலையில் மாருதி சுசுகியுடன் இணைந்து அர்பன் க்ரூசர் ஹைரடர் வாகனத்தை தயாரித்துள்ளது.இந்த வாகனத்தின் சிறப்பம்சமே ப்யூர் இவி மோடில் இயங்குவது தான். இந்த வகை காரை வெளியிடுவதில் டொயோட்டாவே முதல் போட்டியாளரும் கூட. அதேபோல நடுத்தர வகையிலான எஸ்யூவி காரான இந்தி ஏடபிள்யூடி என்று சொல்லக்கூடிய ஆல் வீல் ட்ரைவ் வசதியுடன் வருகிறது.  இந்த காரானது இம்மாதத்தின் இறுதியில் விற்பனைக்கு வரவிருக்கும் நிலையில் இக்காரின் விலை மற்றும் மாடல்கள் உள்ளிட்டத் தகவல்களை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. 




டொயோட்டா அர்பன் க்ரூசர் ஹைரைடர் காரானது இ,எஸ்,ஜி மற்றும் வி ஆகிய வேரியண்ட்களில் வருகிறது. இரண்டு எஞ்சின்கள் வகைகளில் 103 ஹெச்பி, 1.5 லிட்டர் மைல்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய பெட்ரோல் எஞ்சின் வருகிறது. மற்றொன்றில் ஸ்ட்ராங் ஹைப்ரிட் எஞ்சினில் 115 ஹெச்பி மற்றும் 1.5 லிட்டர் டிஎன்ஜிஏ அட்கின்சன் சைக்கிள் பெட்ரோல் எஞ்சின் இக்காரின் எஸ், ஜி மற்றும் வி வகைகளில் வருகிறது.  எந்தெந்த வகைகளில் என்னென்ன சிறப்பம்சங்கள் வருகிறது என்பது பற்றி பார்க்கலாம்.


டொயோட்டா அர்பன் க்ரூசர் ஹைரைடர் - இ மாடல்:


இதில் எல்இடி ப்ரொஜக்டர் முகப்பு விளக்குகள், எல்இடி பின்புற விளக்குகள், வீல் கவருடன் கூடிய 17 இன்ச்  உலோகச் சக்கரம், ரூஃப் எண்ட் ஸ்பாய்லர், எலக்ட்ரிக் ஃபோல்டிங் கண்ணாடிகள், கருப்பு நிறத்திலான இண்டீரியர், 4.2 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே இன்ஸ்ட்ருமெண்ட்ஸ், ஆர்ம் ரெஸ்ட், ஸ்டியரிங்கை அட்ஜஸ்ட் செய்துகொள்ளும் வசதி, ஆட்டோமேட்டிக் ஏசி, பின்பக்கம் ஏசி செல்லும் வசதி, சாவியில்லாமல் காரை திறக்கும் வசதி, இரண்டு ஏர்பேக்குகள், வாகன நிலைத்தன்மை கட்டுப்பாடு, ஹில் ஹோல்ட் கண்ட்ரோல் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார் ஆகியவை வருகின்றன.




ஹைரைடர் - எஸ் வேரியண்ட்:


பவர்ட்ரைன் 1.5 பெட்ரோல் மைல்ட் ஹைப்ரிட் மற்றும் 1.5 பெட்ரோல் ஸ்ட்ராங் ஹைப்ரிட் இ-சிவிடி


க்ரிஸ்டல் அக்ரிலிக் க்ரில், கருப்பு மற்றும் காவி நிறத்திலான இண்டீரியர், 7 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம், 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமெண்ட் க்ளஸ்ட்டர், ஆண்ட்ராய்ட் ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே, அலெக்ஸா மற்றும் கூகிள் அசிஸ்டென்ஸ், 4 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல், ஸ்டியரிங் மவுண்டட் கண்ட்ரோல்ஸ், பெடெல் ஷிஃப்டர்ஸ், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா.


 ஹைரைடர் ஜி வேரியண்ட்:


எல்இடி முகப்பு விளக்குகள், 17 இன்ச் அல்லாய் வீல், ரியர் வைப்பர் மற்றும் வாஷர், ஆட்டோ ஃபோல்டிங் அவுட்சைட் விங் மிரர்ஸ், க்ரோம் விண்டோ லைன் கார்னிஷ், 9 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெய்ன்மெண்ட்,, 6 ஸ்பீக்கர்களைக் கொண்ட அர்கமீஸ் சவுண்ட் சிஸ்டம், ஆம்பியண்ட் இண்டீரியர் லைட்டிங், பனோரமிக் சன்ரூஃப், ஹெட் அப் டிஸ்ப்ளே, வயர்லஸ் சார்ஜிங், சைட் மற்றும் கர்டைன் ஏர் பேக் ஆகியவை இந்த மாடலில் வருகிறது.


ஹைரைடர் வி வேரியண்ட்:


பவர்ட்ரைன் 1.5 பெட்ரோல் மைல்ட் ஹைப்ரிட் எம்டி/ஏடி, 1.5 பெட்ரோல் மைல்ட் ஹைப்ரிட் எம்டி ஏடபிள்யூடி, 1.5 பெட்ரோல் ஸ்ட்ராங் ஹைப்ரிட் இ-சிவிடி


இதனுடன், ரூஃப் டெயில்ஸ், அர்கமிஸ் சர்ரவுண்ட் சிஸ்டம், லெதர் சீட்கள், லெதரால் கவர் செய்யப்பட்ட ஸ்டியரிங் வீல், பனோராமிக் சன்ரூஃப், ஏடபுள்யூடி ட்ரைவ் மோட், 360 டிகிரி கேமரா, கார் காற்றழுத்த கண்காணிப்பான், மற்றும் மலைப்பகுதியில் இருந்து கீழே இறங்கும்போது கட்டுப்படுத்த ஹில் டிஸ்செண்ட் கண்ட்ரோல் ஆகிய வசதிகள் உள்ளன.




இந்த கார்கள் விற்பனைக்கான புக்கிங்கை டொயோட்டா நிறுவனம் ஏற்கனவே தொடங்கிவிட்டது. 25,000 ரூபாய் முன்பணம் செலுத்தி இந்த காரினை முன்பதிவு செய்துகொள்ளலாம். இவ்வாகனங்களுக்கான விற்பனை விலை விரைவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஹூண்டாய் க்ரிடா, கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷக் ஆகிய வாகனங்களுக்குப் போட்டியாக இந்த டொயோட்டா க்ரூஸர் ஹைரைடர் களமிறங்குகிறது. மாருதி சுசுகியின் ஹைரைடர் கார் இந்த ஆண்டு விழாக்காலத்தின் போது சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI