உலகின் மிகவும் புகழ்பெற்ற இரு சக்கர வாகன நிறுவனம் ராயல் என்ஃபீல்ட். இவர்களின் இரு சக்கர வாகனங்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இவர்கள் விரைவில் இந்தியாவில் புதிய இருசக்கர வாகனங்களை அறிமுகப்படுத்த உள்ளனர்.

Continues below advertisement

1. Royal Enfield Himalayan 750:

ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள இரு சக்கர வாகனம் Royal Enfield Himalayan 750. இவர்களின் ஹிமாலயன் 450 பைக்கில் 750 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்ட வேரியண்டாக அறிமுகமாக உள்ளது இந்த Royal Enfield Himalayan 750.  யுஎஸ்டி ஃபோர்க்ஸ், மிகப்பெரிய பெட்ரோல் டேங்கர், ஸ்போக் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. 6 கியர்கள் உள்ளது.

2.Royal Enfield Continental GT 750:

ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் விரைவில் அறிமுகமாக உள்ளது Royal Enfield Continental GT 750. இது ஒரு ரேஸ் பைக் மாடலில் உள்ளது. நெடுந்தூர பயணத்திற்கு உகந்த இரு சக்கர வாகனமாக இந்த பைக்கை தயாரித்துள்ளனர். அதிக ஆற்றல் மற்றும் அதிக இழுதிறன் கொண்ட இரு சக்கர வாகனமாக இதை தயாரித்துள்ளனர்.

Continues below advertisement

3. Royal Enfield Himalayan 440:

ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள இரு சக்கர வாகனம் இந்த Royal Enfield Himalayan 440. இந்த பைக் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. 25.4 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. 34 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 440 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் கொண்டது. 25.4 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. 

4. Royal Enfield Scram 450:

ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் விரைவில் அறிமுகமாக உள்ள Royal Enfield Scram 450. 452 சிசி லிக்யூட் கூல்ட் சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 40.2 பிஎஸ் திறன் கொண்டது. 40 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 6 கியர்கள் கொண்டது. 

5. Flying Flea S6 Electric Scrambler:

ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் புதிய மின்சார பைக்காக அறிமுகமாக உள்ளது Flying Flea S6 Electric Scrambler. ஏற்கனவே அறிமுகமாகிய மின்சார பைக்கான Flying Flea பெரியளவில் வரவேற்பு பெறவில்லை. ஆனால், அது பெரிய வரவேற்பை பெறவில்லை. அதன் அப்டேட் வெர்சனாக இது அறிமுகமாக உள்ளது. 154 கிலோமீட்டருக்கு மேல் மைலேஜ் அளிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 115 கிலோமீட்டர் வரை அதிகபட்ச வேகத்தில் செல்லலாம். 

6. Royal Enfield Interceptor 750

ராயல் என்ஃபீல்ட் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள 750 சிசி எஞ்ஜின் திறன் கொண்ட இரு சக்கர வாகனம்தான் Royal Enfield Interceptor 750. நெடுந்தூர பயணத்திற்காக பிரத்யேகமாக இந்த இரு சக்கர வாகனம் தயாரிக்கப்படுகிறது. இந்தாண்டு இறுதி அல்லது அடுத்தாண்டு இந்த பைக் அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI