இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்று மாருதி சுசுகி. இவர்களின் கார்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. 

Continues below advertisement

பட்ஜெட் விலை முதல் சொகுசு கார்கள் வரை பல்வேறு வகையிலான கார்கள் விற்பனையில் அசத்தி வருகின்றனர். இவர்கள் இந்திய சந்தையில் விரைவில் 4 புதிய கார்களை அறிமுகப்படுத்த உள்ளனர். அவை என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

1. New Maruti Baleno:

மாருதி சுசுகி நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற கார் Baleno. பட்ஜெட் விலையில் விற்பனையாகி வரும் இந்த காருக்கு என்று லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த காரின் அப்டேட் வெர்சனாக புதிய New Maruti Baleno காரை விரைவில் மாருதி நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. பலேனா காரில் இடம்பிடித்துள்ள சிறப்பம்சங்களை மேலும் அதிகரித்து பல்வேறு கூடுதல் வசதிகளுடன் இந்த காரை அறிமுகப்படுத்த மாருதி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Continues below advertisement

2.New Maruti Fronx

மாருதி சுசுகி நிறுவனத்தின் மற்றொரு புகழ்பெற்ற கார் Fronx. கடந்தாண்டு அதிகளவு விற்பனையான காராக இந்த கார் இருந்தது. இதன் புதிய அப்டேட் வெர்சனாக இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளது இந்த New Maruti Fronx. இந்த கார் அடுத்தாண்டு அறிமுகமாக உள்ளது. இந்த காரில் பம்பர்கள் புதியதாக வடிவமைக்கப்பட்டு, முகப்பு விளக்குகளில் மாற்றம் செய்யப்பட்டு, 16 இன்ச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. 1.2 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட உள்ளது. 35 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கும் திறனுடன் இந்த கார் வடிவமைக்கப்பட உள்ளது. 

3.Maruti YMC:

மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் எம்பிவி காரை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளனர். இந்த கார் இ விதாரா கார் வடிவத்தில் அமைக்கப்பட உள்ளது. இந்த மின்சார கார் நல்ல மைலேஜ் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. அடுத்தாண்டு முதல் பாதியில் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 

4.Maruti Y43:

மாருதி சுசுகி நிறுவனம் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ள புதிய கார் Maruti Y43. இந்த கார் இக்னிஸ் காருக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பாதுகாப்பு அம்சங்கள், அட்டகாசமான வெளிப்புறத் தோற்றம் உள்பட பல்வேறு வசதிகளுடன் இந்த காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளனர். சுவிஃப்ட் காருக்கு போட்டியாக இந்த காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்த 4 கார்களும் இந்திய சந்தையில் அறிமுகமானால் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI