புதிதாக வெளியாகியுள்ளSpider-Man: Brand New Dayதிரைப்படத்தை பார்க்க ஆர்வத்துடன் வந்த ரசிகர்களிடையே, ஸ்பாய்லர் கூறிய விவகாரம் தியேட்டருக்குள்ளேயே கைகலப்பாக மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளியான தகவலின்படி, நான்கு நண்பர்கள் குழுவாகSpider-Man: Brand New Dayதிரைப்படத்தை பார்க்க திரையரங்கிற்கு வந்திருந்தனர். அதே வரிசையில் அவர்களுக்கு அடுத்த இருக்கையில் ஒரு இளைஞர் தனது பெண் நண்பருடன் அமர்ந்திருந்தார். அந்த இளைஞர் ஏற்கனவே ஒருமுறை அந்த திரைப்படத்தை பார்த்திருந்ததாக கூறப்படுகிறது.
படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, அடுத்ததாக என்ன நடக்கப் போகிறது, எந்த கதாபாத்திரம் என்ன செய்யப் போகிறது, முக்கிய திருப்பங்கள் என்ன என்பதனை தனது நண்பரிடம் தொடர்ந்து கூறியுள்ளார். அவர் பேசியது அருகில் அமர்ந்திருந்த நான்கு நண்பர்களுக்கும் தெளிவாகக் கேட்கப்பட்டதால், அவர்கள் படம் பார்க்கும் அனுபவம் கடுமையாக பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் அமைதியாக இருந்த அவர்கள், பின்னர் ஸ்பாய்லர் கூறுவதை நிறுத்துமாறு அந்த இளைஞரிடம் கேட்டுள்ளனர். ஆனால் வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே தியேட்டருக்குள்ளேயே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சில நொடிகளில் அது கைகலப்பாக மாறியதால், திரையரங்கில் இருந்த மற்ற பார்வையாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த திடீர் மோதலால் திரைப்பட காட்சி சில நேரம் பாதிக்கப்பட்டதாகவும், தியேட்டர் முழுவதும் பரபரப்பு நிலவியதாகவும் கூறப்படுகிறது. அங்கு இருந்தவர்கள் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றதையடுத்து நிலைமை கட்டுக்குள் வந்தது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
