Yamaha Aerox 155: டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் தொழில்நுட்பம்..! இந்தியாவில் அறிமுகம் யமஹா ஏரோக்ஸ் 155 மாடல்..!

யமஹா நிறுவனம் தனது புதிய ஏரோக்ஸ் 155 மாடலை, டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் தொழில்நுட்பத்துடன் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Continues below advertisement

யமஹா நிறுவனம் தனது புதிய ஏரோக்ஸ் 155 மாடலை, டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் தொழில்நுட்பத்துடன் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய பைக்கானது பிஎஸ்-6 இரண்டாம் கட்ட விதிகளுக்கு உட்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

யமஹா நிறுவனம்:

இந்தியாவில் இருசக்கர வாகன விற்பனையில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் யமஹா நிறுவனமும் ஒன்று. காலத்திற்கு ஏற்றவாறு அவ்வப்போது தனது நிறுவன வாகன மாடல்களை தொடர்ந்து மேம்படுத்தி வருவது, யமஹா நிறுவனத்தின் வெற்றிக்கான காரணங்களில் மிக முக்கியமானது. அந்த வரிசையில் தான் யமஹா நிறுவனம் தனது புதிய ஏரோக்ஸ் 155 மாடலை, டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் தொழில்நுட்பத்துடன் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதோடு, MT-15 V2, R15 V4 மற்றும் R15S மாடல்களையும் மேம்படுத்தி இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

ஏரோக்ஸ் 155 மாடல்:

பிஎஸ்-6 இரண்டாம் கட்ட விதிகளுக்கு உட்பட்டு 2023 ஏரோக்ஸ் 155 மாடல் பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய ஏரோக்ஸ் மாடல் E20 எரிபொருளில் இயங்கும் வகையிலும், OBD 2 விதிகளுக்கு ஏற்றார் போல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் வேரியபில் வால்வு ஆக்டுவேஷன் கொண்ட 155சிசி புளூ கோர் இன்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக இதில் உள்ள டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் தொழில்நுட்பம், எவ்வித பாதைகளிலும் ஸ்கூட்டரின் வீல்-ஸ்பின்-ஐ குறைத்து சிறப்பான கண்ட்ரோல் வழங்குகிறது. 

ஏரோக்ஸ் 155 மாடலில் உள்ள லிக்விட் கூல்டு, 4 ஸ்டிரோக், SOHC, 4 வால்வுகள் கொண்ட மோட்டார் 15பிஎஸ் பவர், 13.9 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. மேலும்,  ஹசார்ட் சிஸ்டம் ஸ்டாண்டர்டு அம்சமாகவும், முற்றிலும் புதிய சில்வர் நிறத்திலும் கிடைக்கிறது.

விலை விவரம்:

2023 யமஹா ஏரோக்ஸ் 155 சில்வர் நிறம் ரூ. 1,42,800 

2023யமஹா R15 V4 இண்டன்சிட்டி வெள்ளை நிறம் ரூ.1,85,900

2023 யமஹா MT-15 V2 மேட் புளூ மற்றும் மெட்டாலிக் பிளாக் ரூ. 1,64,900

2023 யமஹா R155S ரூ. 1, 63,400 

பூர்த்தி செய்யப்பட்ட எதிர்பார்ப்பு:

நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதிய அப்டேட்டின்படி, 2023 R15 V4 மாடலில் குயிக்ஷிஃப்டர் அம்சம் மற்றும் புதிதாக வெள்ளை நிறத்தில் கிடைக்கிறது. 2023 R15S மாடலில் 155சிசி இன்ஜின் மற்றும் எல்சிடி டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய 2023 R15 V4, R15S மற்றும் MT-15 V2 மாடல்களில் லிக்விட் கூல்டு, 4 ஸ்டிரோக், SOHC, 4 வால்வுகள் கொண்ட 155சிசி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

OBD2 விதிகளுக்கு பொருந்தும் புதிய இன்ஜினுடன் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கும் வேரியபில் வால்வு ஆக்டுவேஷன் தொழில்நுட்பமும் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 18.4 பிஎஸ் பவர், 14.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும்.

கூடுதல் ஆப்ஷன்கள்:

MT-15 V2 வாடிக்கையாளர்களுக்கு அதிக ஆப்ஷன்களை வழங்கும் நோக்கில் யமஹா நிறுவனம் 2023 மாடலை டார்க் மேட் புளூ மற்றும் மெட்டாலிக் பிளாக் என இரண்டு புதிய வண்ணங்களில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. அதோடு, ப்ளூடூத் கனெக்ட் அம்சம், விருப்பத்தின் அடிபடையில் தேர்வு செய்து கொள்ளும் ஆப்ஷனாக வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக டூயல் சேனல் ஏபிஎஸ், டிசிஎஸ் போன்ற வசதிகள் இடம்பெற்றுள்ளன.

Continues below advertisement
Sponsored Links by Taboola