பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் இன்று (08.04.2023) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றம்:
பிரதமரின் சென்னை வருகையின்போது விழா நடக்கும் இடங்களை சுற்றியுள்ள சாலைகளிலும், ஐ.என்.எஸ். அடையாறு முதல் சென்ட்ரல் ரயில் நிலையம் வரையிலும் போக்குவரத்து மெதுவாக செல்ல வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ட்ரல் ரயில் நிலையம் - விவேகானந்தர் இல்லம் வரை பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை போக்குவரத்து மெதுவாக செல்லலாம்.
அண்ணா ஆர்ச் முதல் முத்துசாமி முனை வரை இரு திசைகளிலும் வணிக வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பூவிருந்தவல்லி சாலையில் வரும் வாகனங்கள் அண்ணா அரசு வளைவில் திரும்பி அண்ணா நகர், புதிய ஆவடி சாலை வழியாக செல்ல வேண்டும்.
பல்லாவரத்திலிருந்து சென்னை விமான நிலையம், கிண்டி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- பல்லாவரத்திலிருந்து சென்னை விமான நிலையம், கிண்டி மார்க்கமாக செல்லும் வாகன போக்குவரத்து அனைத்தும் தடை செய்யப்படுகிறது.
- GST சாலையில் தாம்பரம், குரேம்பேட்டையிலிருந்து மீனம்பாக்கம், கிண்டி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் திருநீர்மலை மேம்பாலம் வழியாக 200 அடி ரேடியல் சாலை வழியாக ஈச்சங்காடு சந்திப்பு, காமாட்சி மருத்துவமனை சந்திப்பு வழியாக வேளச்சேரி மார்க்கமாகவோ அல்லது துரைபாக்கம் மார்க்கமாகவோ சென்னைக்கு செல்லலாம்.
- GST சாலை பெருங்களத்தூரிலிருந்து தாம்பரம், பல்லாவரம் நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் தாம்பரம் மேம்பாலம் வழியாக வலது புறம் திரும்பி வேளச்சேரி பிரதான சாலை வழியாக சேலையூர், சந்தோஷபுரம், பள்ளிக்கரணை வழியாக சென்னைக்கு செல்லலாம்.
- GST சாலை செங்கல்பட்டிலிருந்து தாம்பரம் நோக்கி வரும் அனைத்து
- கனரக வாகனங்களும் வண்டலூர் வெளிவட்ட சாலை(ORR) வழியாக சென்னைக்கு செல்லலாமம்.
- கிஷ்கிந்தா சாலையில் இருந்து தாம்பரம் நோக்கி வரும் அனைத்து கனரக வாகனங்களும் வெளிவட்ட சாலை(ORR) வழியாக பூந்தமல்லி நோக்கி செல்லலாம்.