சொகுசு வாகனங்களுக்கு பெயர் போன பிஎம்டபிள்யூ நிறுவனம், வாடிக்கையாளர்களை கவரும் விதமாக தனது வாகனங்களை தொடர்ந்து மேம்படுத்தி புதிய மாடலாக சந்தையில் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிறுவனத்தின் பைக்குகளின் விலை கூடுதலாக இருந்தாலும், அதில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


பிஎம்டபிள்யூ S 1000 RR பைக் மாடல் அறிமுகம்:


இந்நிலையில் தான், பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்துவதற்கான,  புது பைக்கின் டீசரை வெளியிட்டு உள்ளது. அதில், பைக்கின் பெயரோ, விவரங்களோ எதுவும் இடம்பெறாத நிலையில், சில தகவல்களின் அடிப்படையில் அது 2023 பிஎம்டபிள்யூ S 1000 RR மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. புதிய பைக்கை வரும் டிசம்பர் 2ம் தேதி, இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளதாக பிஎம்டபிஎள்யூ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 1000சிசி திறன் கொண்ட இந்த பைக், சர்வதேச சந்தையில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.   


இன்ஜின் திறன் விவரங்கள்:


இதன் பின்புறம் புதிதாக உருவாக்கப்பட்டு அதிக செயல்திறன் வெளிப்படுத்துவதோடு, மேம்பட்ட அசிஸ்டன்ஸ் சிஸ்டம்களை கொண்டுள்ளது. இந்த மாடலில் 999சிசி, இன்-லைன் 4 சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 206.5 குதிரைகளில் திறன், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் பிஎம்டபிள்யூ ஷிஃப்ட்கேமும், ஸ்லிப்பர் கிளட்ச் கொண்ட 6-ஸ்பீடு கியர்பாக்ஸும் வழங்கப்பட்டுள்ளது.


பைக்கின் சிறப்பம்சங்கள்:


எலெக்ட்ரிக் அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், ஸ்லைடு கண்ட்ரோல், ஏபிஎஸ் மற்றும் பிரேக் ஸ்லைட் அசிஸ்ட், நான்கு ரைடு மோட்கள், ஹில் ஸ்டார்ட் கண்ட்ரோல், பை-டைரெக்‌ஷனல் குயிக்‌ஷிஃப்டர், லான்ச் கண்ட்ரோல், பிட் லேன் லிமிட்டர் உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. முன் மற்றும் பின் சக்கரங்கள் இரண்டிலும் டிஸ்க் பிரேக்குகளுடன், ரைடு-பை-வயர் த்ரோட்டில் போன்ற அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளன. முந்தைய வெர்ஷனை விட கூடுதல் மாற்றங்களை பெற்றுள்ள 2023 மாடல் பைக், மெல்லிய எல்இடி முகப்பு விளக்கு, ஃபேரிங்கில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு அதிக நிலைத்தன்மை வழங்கும் வகையில் ஏரோ பேக்கேஜ் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன், 10 கிலோ வரை டவுன்ஃபோர்ஸ் வழங்கக்கூடிய விங்லெட்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.


விலை விவரம்:


அமெரிக்க சந்தையில் 17,895 டாலர்களுக்கு அதாவது ரூ. 14.60 லட்சத்திற்கு 2023 பிஎம்டபிள்யூ S 1000 RR விற்பனை செய்யப்படுகிறது. இந்திய சந்தையில் இந்த பைக்கின் விலை, டிசம்பர் 2ம் தேதி அறிமுகப்படுத்தும்போது வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம், கோவாவில் நடைபெற உள்ள பைக் வார நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட உள்ள, பிஎம்டபிள்யூ S 1000 RR பைக் மாடலின் விலை இந்திய சந்தையில்  ரூ.19.75 லட்சம் ஆக நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது.  இந்திய சந்தையில் Ducati Panigale V4 மற்றும் Kawasaki ZX-10R போன்ற மாடல்களுக்கு, பிஎம்டபிள்யூ S 1000 RR போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI