சனி பகவான் நீதியின் கடவுளாக கருதப்படுகிறார். ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குகிறார். இந்து ஜோதிடத்தின்படி நவக்கிரகங்களில் சனியும் ஒன்று. அதனால்தான் சனிபகவானின் அருளைப் பெற, பல்வேறு வகையான பரிகாரங்கள் பின்பற்றப்படுகின்றன, அவற்றில் ஒன்று கடுகு எண்ணெய்.
சாஸ்திரங்களின்படி, சனி பகவானுக்கு கடுகு எண்ணெயை வழங்குவதன் மூலம், அவர் மகிழ்ச்சி அடைகிறார் என்று நம்பப்படுகிறது. இதன் காரணமாக நீங்கள் சதே சதி, சனி தோஷத்திலிருந்து விடுபடுவீர்கள். சனி பகவானுக்கு கடுகு எண்ணெயை சமர்பிப்பதோடு, கடுகு எண்ணெய் விளக்கையும் ஏற்ற வேண்டும், இது மங்களகரமானதாக கருதப்படுகிறது.
சனிபகவானுக்கு ஏன் கடுகு எண்ணெய்?
அனுமனால்தான் இந்த நடைமுறை தொடங்கியது. ராமாயண புராணத்தின்படி, ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு ராமரின் படையால் பாலம் கட்டப்பட்டபோது, அனுமனுக்கு பாதுகாப்பைக் கவனிக்கும் பொறுப்பு இருந்தது. ஒரு நாள், அனுமன் ஒரு மரத்தடியில் அமர்ந்து ராமரிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது, சனி பகவான் வந்து அனுமானைக் கண்களைத் திறந்து தன்னுடன் சண்டையிடும்படி கூறினார். மேலும், ஒருமுறை சனி தேவ் ராவணனால் சிறையில் அடைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
அத்தகைய சூழ்நிலையில், சீதா தேவியைத் தேடி இலங்கைக்கு வந்த அனுமன், சனி தேவன் சிறைபிடிக்கப்பட்டிருப்பதைக் கண்டார். அப்போது சிறையில் இருந்த சனி தேவ் தன்னை விடுவிக்குமாறு அனுமனிடம் கேட்டுக்கொண்டார். அதனையடுத்து சனி தேவ்வை சிறையிலிருந்து விடுவித்து, இலங்கையிலிருந்து வெகுதூரம் தூக்கி எறிந்தார்.
சனி பகவான் தூக்கி எறியப்பட்டதால் அவர் காயம் அடைந்தபோது, அனுமன் கடுகு எண்ணெயை சனி தேவின் வலியைக் குறைக்க அவரது காயத்தில் தடவினார். இது சனி பகவானின் காயத்தை சரி செய்து அவரை மகிழ்ச்சியடைய செய்தது. இதனால் வரும் காலங்களில் எனக்கு கடுகு எண்ணையை அளிக்கும் பக்தருக்கு எனது ஆசிகள் என்றும் நிலைத்திருக்கும் என சனி பகவான் கூறியதாக புராணங்களில் இருக்கிறது.
சனிபகவானுக்கு கடுகு எண்ணெய் எப்படி சமர்பிக்க வேண்டும்?
சனி பகவானுக்கு கடுகு எண்ணெயை சமர்பிப்பதன் மூலம் பல பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். சனிபகவானின் அருளால், மகிழ்ச்சி, செழிப்பு, ஆரோக்கியம் மற்றும் செல்வச் செழிப்புடன் ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும்.
சனி பகவானுக்கு எண்ணெய் வழிபாடு செய்ய சனிக்கிழமை சிறந்த நாளாக கருதப்படுகிறது. ஏனென்றால் அது சனிபகவானுக்குரிய நாள்.
கடுகு எண்ணெயில் கறுப்பு எள், கறுப்பு உளுத்தம் பருப்பை கலந்து சனி பகவானுக்கு சமர்ப்பணம் செய்யலாம். இதனால் உங்கள் வீட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்